azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 03 Jul 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 03 Jul 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Seek jnanam (spiritual knowledge), which is the seat of sweetness. Get rid of the desire for sense-enjoyment, which like the pleasure you get while scratching itching eczema, only makes the complaint worse. You cannot cure it by yielding to the temptation to scratch. The more you scratch, the more you are tempted to continue, until bleeding intervenes. So desist from that vain pursuit and concentrate on spiritual matters, or at least, move in the world with the ever present consciousness that it is a morass, a net, a trap, into which attachment and desire will precipitate you. Be a true devotee and become so small that you wriggle out of the shackles of the senses or be a true jnani and become so huge, that you escape by breaking the shackles. (Divine Discourse, Dec 16, 1964)
DOUBT IS EASY AND FAITH IS DIFFICULT. - BABA
இனிமையின் இருப்பிடமான ஞானத்தை நாடுங்கள். வேதனையை அதிகமாக்கவே செய்யும், சிரங்கைச் சொறிந்து கொள்வதால் நீங்கள் பெறும் சுகத்தைப் போன்ற, புலனின்பத்தின் மீதான ஆசையை விட்டொழியுங்கள். சொறிந்து கொள்ள வேண்டும் என்ற தூண்டுதலுக்கு இடம் அளிப்பதன் மூலம் நீங்கள் அதைக் குணப்படுத்த முடியாது.நீங்கள் அதிகம் சொறியச் சொறிய, இரத்தக் கசிவு குறுக்கிடும் வரை, அதை மேலும் தொடருமாறு நீங்கள் தூண்டப் படுகிறீர்கள்.அந்த வீண் நாட்டத்திலிருந்து விலகி,ஆன்மீக விஷயங்களில் மனதைச் செலுத்துங்கள் அல்லது குறைந்த பட்சம், பற்றுதலும்,ஆசையும், உங்களை இட்டுச் செல்லும் இந்த உலகம் ஒரு புதைகுழி, ஒரு வலை, ஒரு கண்ணிப் பொறி, என்ற இடையறாத விழிப்புணர்வுடன் இந்த உலகில் நடமாடுங்கள். உண்மையான ஒரு பக்தனாக ஆகி, புலன்களின் விலங்கிலிருந்து வளைந்து நெளிந்து வெளியே வரும் அளவிற்குச் சின்னவராக ஆகி விடுங்கள் அல்லது ஒரு ஞானியாக ஆகி, அந்த விலங்கினை உடைத்து வெளியே வரும் அளவிற்கு பெரியவனாக ஆகி விடுங்கள்.
சந்தேகப்படுவது எளிது;நம்பிக்கை கொள்வது கடினமானதே- பாபா