azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 02 Jul 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 02 Jul 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

God asks for the heart, the full heart and nothing but the heart. If the heart has many leaks, the sweetness will be drained away and you cannot offer God the full heart. Egoism, pride, thirst for fame - all these are leaks. The seeds will sprout only when they are well within the soil, not when they are on the surface. If you donate something to a good cause, hoping that your name will appear in the newspaper, exulting when it is seen there, dejected when it is not found, then that charity springs a leak. Such sacrifice is superficial and selfish. Karna lost his life when he recalled in despair such sacrifices he had made; they should not be counted in the memory. Bargaining and calculating are useless in the spiritual field. You cannot haggle with the Lord and ask for proportionate rewards. Ask for proportionate reward and you lose all. He has His own arithmetic. (Divine Discourse, Dec 17, 1964)
WHEN YOUR HEART IS PURE, THE LIGHT OF WISDOM SHINES. - BABA
இறைவன் கேட்பதெல்லாம், உங்கள் இதயத்தையே, முழுமையான இதயத்தையே, இதயத்தைத் தவிர வேறு எதையும் இல்லை.இதயத்தில் பல ஓட்டைகள் இருக்குமானால்,அதன் இனிமை வழிந்து ஓடி விடும்; உங்களால் இதயத்தை முழுமையாக இறைவனுக்கு அற்பணிக்க முடியாது. அஹங்காரம், தற்பெருமை, புகழுக்காகத் தவிப்பது- இவை அனைத்துமே இந்த ஓட்டைகள். விதைகள் , நன்றாக நிலத்தில் பதிந்திருந்தால் மட்டுமே முளைக்கும்; அவை மேலோட்டமாக இருந்தால் அல்ல. நாளிதழில் உங்கள் பெயர் வரும் என எதிர்பார்த்து, நீங்கள் ஏதோ ஒரு நல்ல நோக்கத்திற்காக, நன்கொடை அளித்து விட்டு, அதைக் கண்டால் களிப்படையவோ, காணப்படா விட்டால் மனம் தளரவோ செய்தால், அந்த தானம் ஒரு ஓட்டையாக ஆகி விடும். இப்படிப் பட்ட தியாகம் மேலோட்டமானதும், சுயநலமானதும் ஆகும். அவன் செய்த இப்படிப் பட்ட தியாகங்களை எப்போது விரக்தியில் நினைவு கூர்ந்தானோ, அப்போதே கர்ணன் தன் உயிரை இழந்தான்; இவற்றை நினைவில் வைத்து கணக்கிடக் கூடாது. பேரம் பேசுவதும், கணக்கிடுவதும், ஆன்மீகத் துறையில் பயனற்றவை. நீங்கள் , இறைவனுடன் பேரம் பேசி, அளவு வாரியாக பலன்களைக் கேட்க முடியாது. அளவுக்கு ஏற்ற பலன்களை நாடினால், நீங்கள் அனைத்தையும் இழந்து விடுவீர்கள். இறைவனுக்கு, அவனுக்கென்றே ஒரு தனிக் கணக்கு இருக்கிறது.
உங்கள் இதயம் பரிசுத்தமாக இருக்கும் போது,
ஞான ஒளி பிரகாசிக்கிறது- பாபா