azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 29 Jun 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 29 Jun 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

When some friends, well-wishers or relatives place a gift-article in our hands, we accept it gladly, though it does not please us, because our acceptance pleases them. When the gift pleases us, our reaction is hearty. We treasure it and are filled with it. Know that God too reacts the same way to what man offers Him. If the offering is tainted, He may accept it in order to satisfy the longing of the devotee. But when the offering pleases Him in its purity and sincerity, He welcomes it and His joy translates itself as abundant grace. So you must introspect, discover and decide on the offering that gives Him delight! Offer Him your love and virtues, with purity and sincerity to receive His blessings and Grace in abundance. Education is a process of culture. Plant healthy and potent seeds in the inner field of your heart, and reap a plentiful harvest of the valuable fruit - the virtues. (Divine Discourse, Dec 05, 1985)
WHEN YOUR HEART IS PURE, THE LIGHT OF WISDOM SHINES! - BABA
எப்போது, சில நண்பர்கள், நலம் விரும்பிகள் அல்லது உறவினர்கள் ஒரு பரிசுப் பொருளை நமது கைகளில் கொடுத்தால், அது நமக்குப் பிடித்ததாக இல்லா விட்டாலும், அது அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்குமே என்பதால், நாம் அதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறோம். பரிசுப் பொருள் நமக்குப் பிடித்ததாக இருந்தால், நமது பிரதி செயல் இதயபூர்வமானதாக இருக்கும். அதைப் பொக்கிஷம் போல மதித்து, அதனால் பூரித்துப் போகிறோம்.மனிதன் எதையாவது அர்ப்பணிக்கும் போது, இறைவனும் கூட அவ்வாறே நடந்து கொள்கிறான் என்பதை அறிந்திருங்கள். தருவது கரை படிந்ததாக இருந்தால், அவன் பக்தனின் ஆவலைத் தீர்த்து வைக்க, அதை ஏற்றுக் கொள்ளக் கூடும். ஆனால், அர்ப்பணிப்பது அதன் பரிசுத்தம் மற்றும் சிரத்தையினால் அவனை மகிழ்வித்தால், அவன் அதே வரவேற்பதோடு, அவனது ஆனந்தம், அவனது அளவற்ற அருளாக மாறி விடுகிறது. எனவே, நீங்கள் அவனுக்கு மகிழ்ச்சி அளிக்கும் அர்ப்பணிப்பு எது என ஆழ்ந்து சிந்தித்து, கண்டு பிடித்து, முடிவு செய்ய வேண்டும் ! உங்களது ப்ரேமை மற்றும் நல்லொழுக்கங்களை, பரிசுத்தம் மற்றும் சிரத்தையோடு அவனுக்கு அர்ப்பணித்து அவனது ஆசிகளையும், அவனது அளவற்ற அருளையும் பெறுங்கள்.கல்வி என்பது கலாசாரத்தின் ஒரு முறையாகும். உங்கள் இதயமெனும் உள் நிலத்தில், ஆரோக்யமான மற்றும் வலிமையான விதைகளை விதைத்து, விலை மதிப்பற்ற நல்லொழுக்கங்கள் என்ற பழத்தின் ஒரு அபரிமிதமான அறுவடையைப் பெறுங்கள்.
உங்கள் இதயம் பரிசுத்தமாக இருக்கும் போது,ஞான ஒளி பிரகாசிக்கிறது! - பாபா