azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 26 Jun 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 26 Jun 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Without the control of your senses, your spiritual practices (sadhana) will be ineffective; it is like keeping water in a leaky pot! When the tongue craves for some delicacy, assert that you will not cater to its whims. If you persist in giving yourself simple food that is not savoury or hot, but amply sustaining, the tongue may squirm for a few days, but it will soon welcome it. That is the way to subdue it and overcome the evil consequences of it being your master. Since the tongue is equally insistent on scandal and lascivious talk, you must curb that tendency also. Talk little, talk sweetly, and talk only when there is a pressing need. Also, talk only to those to whom you must, and do not shout or raise the voice in anger or excitement. Such control will improve health and mental peace. It will lead to better public relations and less involvement in contacts and conflicts with others. (Divine Discourse, Nov 23, 1968)
COURAGE DURING PAIN OR ADVERSITY (FORTITUDE) ENDOWS YOU WITH SELF-CONFIDENCE.
SELF-CONFIDENCE GENERATES IMMENSE INTERNAL POWER. - BABA
உங்களது புலன்களின் கட்டுப்பாடு இன்றி, உங்களது ஆன்மீக சாதனைகள் பயனற்றவையே; அது ஒரு ஓட்டைப் பானையில் தண்ணீரை வைப்பது போலாகும் ! உங்களது நாக்கு, ஏதாவது ஒரு சுவையான தின்பண்டத்திற்காக ஏங்கும் போது, அதன் சலனத்திற்கு தீனி போட மாட்டேன் என்று ஆணித்தரமாகக் கூறுங்கள். அதிக உப்போ அல்லது காரமோ இல்லாத, ஆனால் போஷாக்கான, எளிய உணவை உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொண்டே வந்தால், நாக்கு சில நாட்களுக்கு நெளியும்; ஆனால் வெகு விரைவில் அதுவே அதை வரவேற்கும். அதுவே, அதை அடக்குவதற்கான வழியும், அது உங்களது எஜமானராக இருப்பதால் ஏற்படும் தீய விளைவுகளை வெல்வதற்கான முறையும் ஆகும். நாக்கு, அவதூறாகவும் மற்றும் காமந்தகாரமாகவும் பேசுவதற்கு அதே அளவு பிடிவாதத்துடன் இருப்பதால், அந்த மனப்பாங்கையும் கூட நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும்.குறைவாகப் பேசுங்கள், இனிமையாகப் பேசுங்கள்; ஒரு கட்டாயத் தேவை இருந்தால் மட்டுமே பேசுங்கள். மேலும், நீங்கள் யாரிடம் பேச வேண்டுமோ அவரிடம் மட்டும் பேசுங்கள்; கூச்சலிடவோ அல்லது கோபம் மற்றும் மனக் கிளர்ச்சியினால் உங்கள் குரலை உயர்த்தவோ செய்யாதீர்கள். இப்படிப் பட்ட கட்டுப் பாடு, தேஹ ஆரோக்கியத்தையும், மனச் சாந்தியையும் மேம்படுத்தும். அது, சிறந்த பொது உறவுகளுக்கு வழி வகுப்பதோடு, பிறருடன் ஏற்படும் சம்பந்தம் மற்றும் சச்சரவுகளையும் குறைக்கும்.
வேதனை அல்லது வீழ்ச்சியின் போது, தைரியமாக இருப்பது உங்களுக்குத் தன்னம்பிக்கையை அளிக்கிறது-
தன்னம்பிக்கை அளவற்ற ஆத்மபலத்தை உருவாக்குகிறது - பாபா