azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 23 Jun 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 23 Jun 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

You must cultivate love towards every one, however distinct the character and capacity of each may be. Though the same blood flows through the entire body, the eye cannot smell, the ear cannot taste, and the nose cannot see; do not over-emphasise the distinctions and quarrel. Emphasise the basic brotherhood and love. As sugar that has dissolved in the cup of water is invisible, but can be experienced by the tongue in every drop, so too the Divine is invisible but immanent; capable of being experienced, in every individual, whether he is at the bottom or on top. Do Namasmarana (repeated remembrance of the Lord) and taste the sweetness that is in the heart of every one; dwell on His glory and His compassion which those names signify. Then, it will be easier for you to visualise Him in all, to love Him in all, and to adore Him in all. (Divine Discourse, Jul 31, 1967)
DO NOT SEEK FROM GOD PETTY THINGS. SEEK HIS GRACE; IT WILL CONFER EVERYTHING YOU NEED! - BABA
ஒவ்வொருவரின் குணமும், திறனும் எவ்வளவு தனிப்பட்டதாக இருந்தாலும், நீங்கள் ஒவ்வொருவருடனும் ப்ரேமையை அபிவிருத்தி செய்து கொள்ள வேண்டும். ஒரே இரத்தம் உடல் முழுவதும் பாய்ந்தாலும், கண் நுகரமுடியாது, காது சுவைக்க முடியாது,மூக்கு காண முடியாது. எனவே, வேறுபாடுகளை மிகைப் படுத்தி, சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள். அடிப்படை சகோதரத்துவத்தையும், ப்ரேமையையும் வலியுறுத்துங்கள். கோப்பை தண்ணீரில் முழுவதும் கரைந்த சர்க்கரை, கண்ணுக்குத் தெரியாமல் இருந்து, ஆனால்,ஒவ்வொரு சொட்டிலும் நாக்கில் புலப்படுவது போல, இறைவனும் கண்களுக்குப் புலப்படாமல் இருந்தாலும், உள்ளுறைகிறான்; ஒருவர் மேல் இருந்தாலோ அல்லது கீழ் இருந்தாலோ, ஒவ்வொரு மனிதனராலும் அனுபவிக்கத் தக்கவனாக இருக்கிறான். இறை நாமஸ்மரணையை இடையறாது செய்து, ஒவ்வொருவரின் இதயத்தில் இருக்கும் இனிமையைச் சுவையுங்கள். அந்தத் திருநாமங்கள் எடுத்துக் காட்டும் அவனது மகிமை மற்றும் கருணையை தியானியுங்கள். பின்னர், அனைவருள்ளும் இறைவனைக் காண்பதும், அனைவருள்ளும் இருக்கும் அவனை நேசிப்பதும், அனைவருள்ளும் இருக்கும் அவனைப் போற்றுவதும், உங்களுக்கு எளிதாகி விடும்.
இறைவனிடமிருந்து அற்பமான பொருட்களை நாடாதீர்கள்; அவனது அருளை வேண்டுங்கள்; அது உங்களுக்குத் தேவையான அனைத்தையும் அளித்து விடும் !- பாபா