azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 18 Jun 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 18 Jun 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Many think that concentration is the same as meditation and take to the wrong path. Concentration is below your senses, whereas meditation is above your senses. We use concentration involuntarily in our daily, normal routine life. When concentration is part and parcel of our daily life, why then do we need to practice it? What we have to practice is that which is beyond these normal senses. We must rise from being below the senses (that is the state of concentration) to the senses (the middle position called contemplation); and from there we must rise above the senses, which is called meditation. Between concentration and meditation there is an area which covers both and that is contemplation. To be in that area of contemplation is to free yourself of routine attachments of the world. When you have completely broken away all your attachments, you break through this area of contemplation and you get into the area of meditation. (Divine Discourse, Mar 28, 1975)
WHENEVER AND WHEREVER YOU PUT YOURSELF IN TOUCH WITH GOD,
IT IS THE STATE OF MEDITATION. - BABA
பலர், மனக்குவிப்பும்,தியானமும் ஒன்றே தான் என எண்ணி, தவறான பாதையில் சென்று விடுகிறார்கள்.மனக்குவிப்பு என்பது உங்களது புலன்களுக்குக் கீழேயும், தியானம் என்பது , புலன்களுக்கு மேலேயும் இருப்பதாகும். நாம் நம்மை அறியாமலேயே, நமது சாதாரண வழக்கமான அன்றாட வாழ்க்கையில், மனக்குவிப்பைப் பயன்படுத்துகிறோம். எப்போது மனக்குவிப்பு என்பது நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கும் போது, பின் நாம் அதைப் பயிற்சி செய்ய வேண்டிய அவசியம் எதற்கு ? நாம் பயிற்சி செய்ய வேண்டியது, இந்த சாதாரண புலன்களுக்கு அப்பாற்பட்டதாகும். புலன்களுக்குக் கீழே இருப்பதிலிருந்து ( மனக்குவிப்பு நிலை), புலன்களின் நிலைக்கு ( ஆழ்ந்த சிந்தனை எனப்படும் இடையில் இருக்கும் நிலை ) உயர வேண்டும்; அங்கிருந்து, புலன்களுக்கு மேலே இருக்கும் தியானம் எனப்படும் நிலைக்கு உயர வேண்டும். மனக்குவிப்பிற்கும், தியானத்திற்கும் இடையில் இந்த இரண்டையும் தொடும் ஆழ்ந்த சிந்தனை என்ற நிலை உள்ளது. இந்த ஆழ்ந்த சிந்தனை எனும் நிலையில் இருப்பதற்கு, நீங்கள் வழக்கமான உலகியல் பற்றுதல்களிலிருந்து விடுபட்டு இருக்க வேண்டும்.உங்களது அனைத்து பற்றுதல்களிலிருந்து, நீங்கள் முழுமையாக விடுபட்டு விலகி வரும்போது, இந்த ஆழ்ந்த சிந்தனை எனும் நிலையை உடைத்து வெளிப்பட்டு, தியானம் எனும் நிலைக்குள் வருகிறீர்கள்.
எங்கெல்லாம், எப்போதெல்லாம், நீங்கள் உங்களுக்கு இறைவனுடன் உறவை ஏற்படுத்திக் கொள்கிறீர்களோ, அதுவே தியான நிலையாகும்- பாபா