azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 17 Jun 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 17 Jun 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

An able monarch will have his ministers under control; he will direct them along proper lines and maintain the peace and security of the kingdom. On the other hand, a monarch who allows himself to be controlled by the ministers does not deserve the throne; he is spurned and disgraced. His kingdom has no peace and security. The mind is the monarch in you, the senses are the ministers. It is the slave of its servants and so, the realm has no peace. Every Sadhaka (spiritual aspirant) who aspires to achieve the expression and expansion of the Divine in oneself has therefore to earn mastery over the senses. That is the first step. The next one is the conquest of the mind. The third is uprooting the Vasanas (innate tendencies), and the fourth, attainment of Jnana (spiritual wisdom). The branches are the senses, the trunk is the mind and the roots are the innate tendencies. All three have to be overcome and destroyed, so that the awareness of the Atmic Reality can be gained. (Divine Discourse, May 6, 1983)
A DISCIPLINED LIFE IS THE BEST OFFERING YOU CAN MAKE TO THE COUNTRY
OR TO THE DIVINE IN YOU. - BABA
ஒரு திறமை வாய்ந்த அரசன், தனது மந்திரிகளைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பான்; அவர்களை சரியான வழியில் செலுத்தி, ராஜ்யத்தில் சாந்தி மற்றும் பாதுகாப்பைப் பராமரிப்பான். மாறாக, மந்திரிகள் தன்னைக் கட்டுப் படுத்த அனுமதிக்கும் அரசன்,அரியணைக்குத் தகுதியற்றவனே; அவன் நிராகரிக்கப் பட்டு, அவமானப் படுத்தப் படுவான். அவனது ராஜ்யத்தில் சாந்தியும், பாதுகாப்பும் இருக்காது. மனமே உங்களுள் உள்ள அரசன், புலன்களே மந்திரிகள்.அது தனது சேவகர்களுக்கு அடிமையாக இருக்கிறது ; எனவே, அதற்கு சாந்தி இல்லை. எனவே, ஒருவருள் உள்ள தெய்வீகத்தின் வெளிப்பாடு மற்றும் விரிவாக்கத்தை அடைய விழையும் ஒவ்வொரு ஆன்மீக சாதகனும், புலன்களின் மீது ஆதிக்கத்தைச் செலுத்த வேண்டும்.இதுவே முதல் படியாகும். இதற்கு அடுத்தது மனதை வெல்வதே. மூன்றாவது, வாஸனாக்களை ( உள்ளார்ந்த உந்துதல்கள் ) வேறோடு பிடுங்கி எறிவது; நான்காவது ஞானத்தை அடைவது. புலன்களே கிளைகள், மனமே மரத்தண்டு, உள்ளார்ந்த உந்துதல்களே வேர்கள். ஆத்ம உண்மை நிலையைப் பற்றிய விழிப்புணர்வைப் பெறுவதற்கு, இந்த மூன்றையுமே அடக்கி, அழிக்க வேண்டும்.
ஒரு கட்டுப்பாடான வாழ்க்கையே, நீங்கள் நாட்டிற்கோ அல்லது உங்களுள் உறையும் இறைவனுக்கோ செய்யக் கூடிய மிகச் சிறந்த அர்ப்பணிப்பாகும்- பாபா