azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 12 Jun 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 12 Jun 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Birth as human is the final stage in the upward evolution of the 840,000 species of living beings. In previous lives, one may have been an insect, worm, bird or an animal and are perhaps now displaying those traits despite the presence of the divine qualities. For example, pride is not an innate human quality; it’s the natural trait of a buffalo. If you display pride, ask yourself, were you a buffalo in a previous life and are unable to shed this inherited quality? Some exhibit stupid stubbornness, which is a sheep’s quality, not a human trait. Sometimes some indulge in petty thefts, akin to a cat. Similarly, the vacillating and fickle nature displayed reminds a previous life as a monkey. Some are incurably ungrateful; indulge even in harming those who help them. The serpent is notorious, for emitting poison even when fed with milk. Isn’t it high time that you truly introspect within and promote beneficial human values in you? (Divine Discourse, Oct 10, 1983)
LOVE, TRUTH AND COMPASSION ARE THE HALLMARKS OF A TRUE HUMAN BEING. - BABA
மனிதப் பிறவி என்பது, 840,000 விதமான ஜீவராசிகளின் பரிணாம வளர்ச்சியின் இறுதிக் கட்டமாகும்.முந்தைய பிறவிகளில் ஒருவர், ஒரு பூச்சி, புழு, பறவை அல்லது ஒரு மிருகமாக இருந்திருக்கக் கூடும்; ஒருவேளை, தெய்வீக குணங்கள் இருந்தாலும் கூட, இப்போது இத்தகைய குணங்களை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கலாம். உதாரணமாக, இறுமாப்பு என்பது உள்ளார்ந்த மனித குணம் அல்ல; அது ஒரு எருமை மாட்டின் இயல்பான குணமாகும். நீங்கள் இறுமாப்பை வெளிப்படுத்தினால், முந்தைய பிறவியில் ஒரு எருமையாக இருந்து, அந்த குணத்தை விடமுடியால் இருக்கிறாயா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். சிலர், மனித குணம் அல்லாத, ஒரு ஆட்டின் குணமான முட்டாள் தனமான பிடிவாதத்தை வெளிப்படுத்துவார்கள். சில சமயம், சிலர் ஒரு பூனையைப் போல, அற்பத் திருட்டுகளில் ஈடுபடுவார்கள். அதைப் போலவே, ஊசலாடும் ,சலன இயல்பு வெளிப்படுவது, ஒரு முந்தைய பிறவியில் ஒரு குரங்காக இருந்ததை நினைவு படுத்துகிறது. சிலர் குணப்படுத்த முடியாத அளவு நன்றி கெட்டவர்களாக, அவர்களுக்கு உதவியவர்களுக்குக் கூட தீங்கு இழைப்பார்கள். பாலை ஊட்டினாலும் கூட, விஷத்தைக் கக்கும் பாம்பு இதற்குப் பெயர் போனதாகும். நீங்கள் உண்மையிலேயே ஆழ்ந்து சிந்தித்து, பயன் தரும் மனித குண நலன்களை உங்களுள் அபிவிருத்தி செய்து கொள்ள வேண்டிய நேரம் இன்னுமா வரவில்லை?
ப்ரேமை,சத்தியம் மற்றும் பரிவு,ஒரு உண்மையான மனிதனின் அடையாளச் சின்னங்களாகும் - பாபா