azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 05 Jun 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 05 Jun 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Devotion should not be confined to the four walls of the shrine-room, or the few minutes you perform meditation. It is a full-time spiritual discipline. Your devotion must be expressed as worship of every one, considering them as living embodiments of Divinity. See God in every one, even in persons whom you regard as your enemies. Practise that broad, inclusive type of Love. How can you derive happiness by showing love and reverence to a stone idol, that does not respond or reflect the feelings? Find out the difficulties and troubles burdening others and help them to the extent you can to tide over them. Learn to live with others, and share your joys and sorrows with them; be forbearing, not overbearing. Living beings will return appreciation and gratitude and wish you well. You can see joy growing in their faces. That will confer satisfaction on you. If you cannot love your fellow man, how can you be devoted to God? (Divine Discourse, Mar 16, 1973)
TRUE SPIRITUALITY CONSISTS IN PROMOTING HUMAN UNITY THROUGH
HARMONIOUS LIVING AND SHARING THE JOY WITH ONE AND ALL. - BABA
பக்தி என்பதை, உங்களது பூஜை அறையின் நான்கு சுவர்களுக்கு உள்ளேயோ அல்லது நீங்கள் செய்கின்ற சில நிமிட தியானத்தோடு மட்டுமோ நிறுத்தி விடக் கூடாது. அது ஒரு முழு நேர ஆன்மீக சாதனையாகும். ஒவ்வொருவரையும், தெய்வீகத்தின் வாழும் திருவுருவங்கள் எனக் கருதி வழிபடுவதாக, உங்களது பக்தி வெளிப்பட வேண்டும். இறைவனை ஒவ்வொருவரிடமும்,நீங்கள் உங்களது எதிரிகளாகக் கருதுபவர்களிடமும் கூடக் காணுங்கள். அப்படிப் பட்ட பரந்த மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய ப்ரேமையைக் கடைப்பிடியுங்கள். உணர்வுகளுக்கு விடை அளிக்காத அல்லது அவற்றை பிரதிபலிக்காத ஒரு கல் விக்ரஹத்தின் மீது அன்பையும், மரியாதையையும், செலுத்துவதன் மூலம் நீங்கள் எவ்வாறு சந்தோஷத்தைப் பெற முடியும்? பிறருக்கு சுமையாக இருக்கும் துன்பங்கள் மற்றும் துயரங்கள் என்ன என்று கண்டறிந்து, அவற்றிலிருந்து அவர்கள் மீண்டு வர, உங்களால் இயன்ற வரை உதவுங்கள். பிறருடன் இணைந்து வாழக் கற்றுக் கொண்டு,உங்களது சந்தோஷங்கள் மற்றும் துக்கங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்; அடக்கி ஆள்பவராக இல்லாமல் , சகிப்புத் தன்மை கொண்டவர்களாக இருங்கள். உயிருள்ள ஜீவராசிகள், பாராட்டையும், நன்றி உணர்வையும் திரும்ப அளித்து உங்களை வாழ்த்துவார்கள். அவர்களின் முகங்களில் ஆனந்தம் பெருகுவதை நீங்கள் காண முடியும். அதுவே உங்களுக்குத் திருப்தியைத் தந்திடும். சக மனிதனையே உங்களால் நேசிக்க முடியவில்லை என்றால், இறைவன் பால் நீங்கள் எவ்வாறு பக்தி கொண்டவர்களாக இருக்க முடியும் ?
உண்மையான ஆன்மீகம் என்பது, இசைவான வாழ்க்கை நடத்தி, எல்லோருடனும் ஆனந்தத்தைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், மனித குல ஒற்றுமையை அபிவிருத்தி செய்வதில் தான் இருக்கிறது - பாபா