azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 04 Jun 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 04 Jun 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Bharatiya culture condemns violence as bestial and even worse. Though epics and ancient tales of India speak of demons, men and gods as diverse, they are names only for traits, which all share, more or less. Humanity must endeavor to get rid of the dross of demonism and invest itself with splendour of Divinity. Be therefore ever vigilant that your activities do not drag you down into the depths of demonhood; let them elevate you into the heights of Divinity. It is really commendable that so many of you are engaged in Bhajans, Nagar Sankirtan and Namasmarana. Let the Name of the Lord proceed from the heart, not from the lips. Be Prahladas in the land that is sick with too many Hiranyakashipus. The name of the Lord is the Narasimha that will save and sustain! Purify yourselves and purify the atmosphere in which and by which you have to live. That is My advice and My blessing. (Divine Discourse, May 12, 1970)
IF YOU FEEL YOU ARE A HUNDRED PERCENT DEPENDENT ON GOD, HE WILL LOOK
AFTER YOU AND SAVE YOU FROM HARM AND INJURY! - BABA
பாரதீய கலாசரம், வன்முறையை, மிருகத்தனமானது என்றும், அதை விடவே மோசமானதும் கூட என கண்டனம் செய்கிறது.புராணங்களும்,பண்டைய பாரதக் கதைகளும், அசுரர்கள், மனிதர்கள் மற்றும் தேவர்கள் என பல வகையாக பிரித்துக் கூறினாலும், இவை, ஏறக் குறைய அனைவரிடமும் காணப்படும் குணாதிசியங்களின் பெயர்கள் மட்டுமே.மனித குலம், அசுரத் தனத்தின் கசட்டை விட்டொழித்து, தெய்வீகக் காந்தியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளப் பாடுபட வேண்டும்.எனவே, உங்களது செயல்கள், உங்களை அசுரத் தனத்தின் ஆழங்களுக்கு இழுத்துச் சென்று விடாமல் இருப்பதில், நீங்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்;அவை தெய்வீகத்தின் சிகரங்களுக்கு உங்களை உயர்த்தட்டும். உங்களில் பலர், பஜனைகள், நகர சங்கீர்த்தனம் மற்றும் இறை நாமஸ்மரணையில் ஈடுபட்டு இருப்பது பாராட்டத் தக்கது. இறைவனது திருநாமம் , உதடுகளிலிருந்து அன்றி, இதயத்திலிருந்து எழட்டும். பல ஹிரண்யகசிபுகளால் பீடிக்கப் பட்டு இருக்கும் நாட்டில், பிரஹலாதனாக இருங்கள். இறைவனது திருநாமமே, காத்து, ரக்ஷிக்கும் நரசிம்மமாகும் ! உங்களையும், எந்த சூழ்நிலையில் மற்றும் எந்த சூழ்நிலையால் நீங்கள் வாழ வேண்டி உள்ளதோ அதையும், பரிசுத்தப் படுத்துங்கள். இதுவே எனது அறிவுரையும்,ஆசீர்வாதமும் ஆகும்.
நீங்கள் நூற்றுக்கு நூறு சதவீதம் இறைவனைச் சார்ந்துள்ளீர்கள் என நம்பினால், அவன் உங்களை போஷித்து, உங்களை துன்பம் மற்றும் துயரத்திலிருந்து காத்திடுவான் ! - பாபா