azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 03 Jun 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 03 Jun 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Let the petty wishes for which you now approach God be realised or not; let the plans for promotion and progress which you place before God, be fulfilled or not - these are not important! Your primary goal should be to become Master of yourself, to hold intimate and constant communion with the Lord who is in you and in the Universe. Welcome disappointments, for they toughen you and test your fortitude. Never give up God, holding Him responsible for your ills. Believe that troubles draw you nearer, making you call on Him always when you are in difficulty. You suffer stomach pain and the doctor gives you the pain of operation, in order to reduce that pain and give you relief. Then you are joyful. Joy is but the interval between two moments of pain, and pain the interval between two moments of joy. (Divine Discourse, May 12, 1970)
IF YOU HONOUR YOUR MOTHER, THE MOTHER OF THE UNIVERSE
WILL GUARD YOU AGAINST HARM. - BABA
எந்த அற்ப ஆசைகளுக்காக நீங்கள் இப்போது இறைவனை அணுகுகிறீர்களோ, அவை நிறைவேறட்டும் அல்லது ஆகாமல் போகட்டும்; இறைவன் முன் நீங்கள் வைக்கும் பதவி உயர்வு மற்றும் முன்னேற்றத்திற்கான திட்டங்கள், பூர்த்தி ஆகட்டும் அல்லது ஆகாமல் போகட்டும் – இவை முக்கியமல்ல ! உங்களுக்கே நீங்கள் எஜமானராக ஆவதும், உங்களுள்ளும், இந்த பிரபஞ்சத்திலும் வியாபித்துள்ள இறைவனுடன் நெருக்கமான மற்றும் இடையறாத இணைப்பை ஏற்படுத்திக் கொள்வதுமே, உங்களது தலையாய குறிக்கோளாக இருக்க வேண்டும். ஏமாற்றங்களை வரவேறுங்கள், ஏனெனில், அவை உங்களுக்கு வலுவூட்டி, உங்கள் மனோபலத்தை சோதிக்கின்றன. ஒருபோதும் உங்களது துக்கங்களுக்கு அவனைக் காரணம் காட்டி, , இறைவனைக் கைவிடாதீர்கள். நீங்கள் துன்பப்படும் போதெல்லாம், உங்களை அவனை அறை கூவி அழைக்க வைப்பதன் மூலம், துன்பங்கள், உங்களை அவனருகில் ஈர்த்து வைக்கின்றன என்பதை நம்புங்கள். நீங்கள் வயிற்று வலியால் அவதிப்படுகிறீர்கள்; வைத்தியர் அந்த வலியைக் குறைத்து, உங்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக, அறுவை சிகிச்சையின் வலியை அளிக்கிறார். பின்னர், நீங்கள் சந்தோஷப் படுகிறீர்கள். இன்பம் என்பது, இரண்டு துன்பத் தருணங்களின் நடுவில் இருப்பதே அன்றி வேறில்லை;துன்பம் என்பது இரண்டு இன்பத் தருணங்களுக்கு நடுவில் உள்ள இடைவெளியே.
நீங்கள் உங்கள் மாதாவை மதித்தால்,
லோகமாதா உங்களுக்கு தீங்கு வராமல் காத்திடுவாள்- பாபா