azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 30 May 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 30 May 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Self-confidence is very essential. This is the foundation on which you must raise the walls of self-sacrifice. You have to therefore lay, first of all, the foundation of self-confidence and build the mansion of self-satisfaction and self-sacrifice. Then you ultimately attain self-realisation. But people do not possess such steady self-confidence. What is the reason? Their mind is lost in dirty, worldly and useless desires. How long can the worldly things last? They come and go like passing clouds. Today students are trained in such education which fosters desires. Along with this education, you must foster human values. Human values are not something that you need to acquire anew. They are born with you and are innate in you. As they are hidden within, you are unaware of them. When the safe vault of the heart is opened by the key of love, the valuable qualities of human values emerge. (Divine Discourse, Sep 26, 2000)
IF YOU ARE PATIENT AND CALM, I SHALL GRANT YOU JOY WITHOUT FAIL. DO NOT YIELD TO DESPAIR. EVEN THE INFANT LOTUS BUDS WILL BLOOM, IN THEIR OWN GOOD TIME. - BABA
தன்னம்பிக்கை என்பது மிகவும் அத்தியாவசியம். இந்த அஸ்திவாரத்தின் மீது தான் சுய தியாகம் எனும் சுவர்களை நீங்கள் எழுப்ப வேண்டும். எனவே, முதன் முதலில், நீங்கள் தன்னம்பிக்கை எனும் அஸ்திவாரத்தை நிறுவி, அதன் மீது சுயதிருப்தி மற்றும் சுயதியாகம் எனும் மாளிகையைக் கட்ட வேண்டும். பின்னர், இறுதியாக நீங்கள் தன்னை உணர்தல் ( ஆத்ம சாக்ஷாத்காரம்) என்ற நிலையை அடைவீர்கள். ஆனால், மக்களிடம் இப்படிப் பட்ட நிலையான தன்னம்பிக்கை இருப்பதில்லை. இதற்கு என்ன காரணம் ? அவர்களது மனம்,கண்ணியமற்ற, உலகியலான மற்றும் பயனற்ற ஆசைகளில் ஆழ்ந்து விட்டது. உலகியலான பொருட்கள் எத்தனை காலம் இருக்க முடியும்? அவை, கலையும் மேகங்களைப் போல, வரும், போகும். இந்நாளில், மாணவர்கள் ஆசைகளைப் பேணும் இத்தகைய கல்வியில் பயிற்றுவிக்கப் படுகிறார்கள். கல்வியுடன் கூடவே, நீங்கள் மனிதப் பண்புகளையும் பேண வேண்டும். மனிதப் பண்புகள், ஏதோ நீங்கள் எங்கிருந்தோ புதிதாகப் பெற வேண்டுபவை அல்ல. அவை உங்களுடன் கூடப் பிறந்தவை மற்றும் உங்களுள் பொதிந்திருப்பவை. அவை உங்களுள் மறைந்து இருப்பதால், நீங்கள் அவற்றைப் பற்றி அறியவில்லை. உங்கள் இதயம் எனும் பாதுகாப்புப் பெட்டகம், ப்ரேமை எனும் சாவியால் திறக்கப் படும் போது, விலையுயர்ந்த மனிதப் பண்புகள் வெளிப்படுகின்றன.
நீங்கள் பொறுமையாகவும், அமைதியாகவும் இருந்தால், நான் தவறாமல் உங்களுக்கு ஆனந்தம் அளிப்பேன். மனச்சோர்வு அடையாதீர்கள். இளம் தாமரை அரும்புகள் கூட, தங்களுக்கே உரித்தான நேரத்தில் தான் மலரும். - பாபா