azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 26 May 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 26 May 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Become attached to God. Feel His Presence and revel in His Glory. Do not cause Him 'disappointment' or 'distress' by any act or word which He does not approve of. Do not give Him the slightest 'bother' or 'worry.' He has none, but if you love Him deeply, you will be concerned about Him as He is your Lord and Love. Jatayu had an unremitting stream of Rama thoughts and he was rewarded by Rama; He came to him in his last moments and Himself performed his last rites, a duty He did not carry out directly even for His father! God will serve you; He will save you and be by your side ever - only you have to cultivate your character and polish your interior so that He might be reflected therein. Sweetness alone is the offering that God likes. Let His Will be done - this should be your guideline! (Divine Discourse, Jan 14, 1967)
PRAY TO GOD AND DRAW FROM HIM THE MAGNET OF HIS GRACE AND OFFER TO THE WORLD
THE POWER OF HIS ELECTRICAL ENERGY. - BABA
இறைவனோடு ஒன்றிணைந்து இருங்கள்.அவன் இருப்பதை உணர்ந்து, அவனது மாட்சிமையில் களித்திருங்கள்.அவன் ஏற்றுக்கொள்ளாத எந்த வார்த்தை அல்லது செயலின் மூலம் அவனுக்கு ‘’ ஏமாற்றத்தையோ’’ அல்லது ‘’துன்பத்தையோ’‘ உண்டாக்காதீர்கள். அவனுக்கு சிறிதளவேனும் ‘’ தொந்தரவையோ ‘’அல்லது ‘’கவலையோ’’ கொடுக்காதீர்கள்.அவனுக்கு இவை எதுவும் இல்லை தான், இருந்தாலும், அவன் உங்களது இறைவன் மற்றும் ப்ரேமை என்பதால், நீங்கள் அவனை ஆழமாக நேசிப்பதாக இருந்தால்,நீங்கள் அவனைப் பற்றி அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். ஜடாயுவுக்கு, இடையறாத ஸ்ரீராம சிந்தனைகள் இருந்தன; அவன் ஸ்ரீராமரிடமிருந்து வெகுமதியைப் பெற்றான். ஸ்ரீராமர், அவனது இறுதித் தருணங்களில் அவனிடம் வந்து, தனது தந்தைக்கே கூடத் தான் நேரடியாகச் செய்யாத இறுதிச் சடங்குகளை அவனுக்கு, அவரே செய்தார் ! இறைவன் உங்களுக்கு சேவை செய்வான்; உங்கள் அருகாமையில் எப்போதும் இருப்பான்; நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் நற்குண நலன்களை வளர்த்துக் கொண்டு உங்களது அகத்தை, அவன் பிரதிபலிக்கும் அளவிற்கு மெருகேற்றிக் கொள்வது தான். இறைவன் விரும்பும் நைவேத்யம் இனிமை மட்டுமே ! அவனது ஸங்கல்பத்தின் படியே நடக்கட்டும்- இதுவே உங்களின் வழிகாட்டியாக இருக்க வேண்டும் !
இறைவனைப் பிரார்த்தித்து, அவனிடமிருந்து ,இறை அருள் எனும் காந்த சக்தியைப் பெற்று, இந்த உலகிற்கு அவனது மின் சக்தியை அளியுங்கள்.