azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 14 May 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 14 May 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

The waters of the river might be dirty, but the devotee who sips it with a mantra or a hymn in praise of God on his lips transmutes it into sanctified water. The body becomes healthy by exercise and work; the mind becomes healthy by devout contemplation and remembrance of the divine name (namasmarana), and by regular, well-planned discipline, joyfully accepted and carried out. Nonviolence is the rice, dedication is the gram (chickpea flour), expiation are the raisins, and repentance is the jaggery (unrefined cane sugar). Mix all these well with the ghee (clarified butter) of virtue. That is the offering you should make to your chosen deity, not the paltry stuff you make out of articles obtained for a paisa in the shops! The Gopis knew this secret passage to the heart of the Lord, that is why they realised Him quickly and fast. (Divine Discourse, Sep 06, 1963.)
GRIEF OR FEAR CAN NEVER EXIST WHEREVER GOD’S NAME IS CHANTED WITH LOVE AND FAITH,
SINCE GOD HIMSELF MANIFESTS THERE! - BABA
நதியின் நீர் அழுக்காக இருக்கலாம்; ஆனால், அதை, இறைவனைப் போற்றும் ஒரு மந்திரம் அல்லது ஸ்லோகத்தைத் தனது உதடுகளில் வைத்துக் கொண்டு உறிஞ்சும் ஒரு பக்தன், அதனைப் புனிதமானதாக மாற்றி விடுகிறான். உடல், பயிற்சி மற்றும் உழைப்பால் ஆரோக்யமானதாகிறது; முறையான, நன்றாக திட்டமிடப்பட்ட கட்டுப்பாடுடன்,ஆனந்தமாக ஏற்றுக் கொண்டு செய்யப்படும் இறை நாமஸ்மரணை மற்றும் பக்தி சிரத்தையுடன் கூடிய தியானத்தின் மூலம் , மனம் ஆரோக்யமானதாகிறது. அஹிம்சையே அரிசி,அற்பணிப்பே பருப்பு, பச்சாதாபமே திராட்சை, தவறுக்கு வருந்துதலே வெல்லம், இவை அனைத்தையும் நன்றாக நல்லொழுக்கம் என்ற நெய்யுடன் கலந்து விடுங்கள். நீங்கள் , உங்கள் இஷ்ட தெய்வத்திற்கு அர்ப்பணிக்க வேண்டிய பிரசாதம் அது தானே அன்றி , நீங்கள் கடைகளிலிருந்து ஒரு காசு கொடுத்து வாங்கிய பொருட்களால் சமைக்கும் அற்பமான பதார்த்தம் அல்ல ! கோபிகைகள், பகவானது இதயத்திற்குச் செல்லக் கூடிய இந்த ரகசியப் பாதையை அறிந்திருந்தார்கள்; அதனால் தான் அவர்கள் இறைவனை துரிதமாகவும், விரைவாகவும் உணர்ந்தார்கள்.
இறைவன் அங்கேயே ப்ரத்யக்ஷமாகி விடுவதால், ப்ரேமை மற்றும் நம்பிக்கையுடன் எங்கெல்லாம் இறைநாமஸ்மரணை செய்யப் படுகிறதோ, அங்கு துயரம் அல்லது அச்சம் ஒருபோதும் இருக்க முடியாது -பாபா