azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 13 May 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 13 May 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

I have heard discordant voices and whispers that if Sathya Sai Baba is really Divine, why is the Bukkapatnam water storage dry during the greater part of the year? Some of you here might have heard such statements, made by irresponsible persons who have no knowledge of the working of Cosmic Laws. It is really an absurd idea! Why should I expend My grace especially on this tank? Does proximity grant greater attachment? No! The entire Universe is Mine. All places are equally near for Me and, if they turn away from good ways, all are equally far! Nearness to God can never be measured by miles. Unless the people of this village have deposited amounts in the bank, how can the bank honour the cheques they draw? Ask yourself earnestly: Have you deposited devotion to the Lord, service to your kind, and faith in your spiritual practice? Then alone can you draw upon the Grace which is won only by such efforts! (Divine Discourse, Mar 13, 1964)
TO WIN RAMA’S GRACE AND TO GAIN LIBERATION, IT IS NOT ENOUGH TO REPEAT HIS NAME;
YOU MUST PRACTICE THE RAMA PRINCIPLE. - BABA
சத்ய சாய் பாபா உண்மையிலேயே தெய்வீகமானவர் என்றால், புக்கபட்டணம் ஏரி வருடத்தில் பெரும்பாலான நேரம் ஏன் வரண்டே இருக்கிறது என்ற பொருந்தாத பேச்சுக்கள் மற்றும் முணுமுணுப்புகளை நான் கேட்டிருக்கிறேன். பிரபஞ்சத்தின் சட்டங்களின் இயக்கத்தைப் பற்றிய அறிவே இல்லாத, பொறுப்பற்ற சிலரால் கூறப்பட்டும் இப்படிப் பட்ட பேச்சுக்களை உங்களில் சிலரும் கேட்டிருக்கக் கூடும். இது உண்மையிலேயை ஒரு அபத்தமான கருத்தாகும் ! நான் எனது அருளை இந்த ஏரிக்காக மட்டும் ஏன் அளிக்க வேண்டும்? அருகாமை, அதிகம் பற்றுதலைத் தருமா ?இல்லை! இந்த பிரபஞ்சம் அனைத்தும் என்னுடையதே. அனைத்து இடங்களும் எனக்கு அருகில் இருப்பவையே; அவைகள் நல்ல வழிகளில் இருந்து பிறண்டு சென்று விட்டால், அவை அனைத்தும் அதே அளவு தொலைவில் இருப்பவையே ! இறைவனது அருகாமை, மைல்களை வைத்து ஒரு போதும் கணக்கிடப்படுவதில்லை. இந்த கிராமத்தில் உள்ளவர்கள், வங்கியில் பணத்தை சேமித்து வைத்திருக்கா விட்டால், வங்கி எவ்வாறு அவர்களது காசோலைகளுக்குப் பணம் தர முடியும் ? நீங்கள் இறைவனிடம் பக்தி, உங்களப் போன்றவர்களுக்கு சேவை, உங்களது ஆன்மீக சாதனையில் நம்பிக்கை ஆகியவற்றை சேமித்து வைத்திருக்கிறீர்களா என உங்களை நீங்களே ஆத்மார்த்தமாகக் கேட்டுப் பாருங்கள். அதன் பிறகே, இப்படிப் பட்ட முயற்சிகளால் மட்டுமே வெல்லக் கூடிய இறை அருளை நீங்கள் பெற முடியும்.
ஸ்ரீராமரின் அருளைப் பெற்று, ஆத்ம சாக்ஷாத்காரம் அடைவதற்கு, அவரது திருநாமத்தை ஜபித்தால் மட்டும் போதாது ; ஸ்ரீராம தத்துவத்தை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும் - பாபா