azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 10 May 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 10 May 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

When Krishna danced on the head of snake Kaliya, all the poison was vomited and the serpent was subdued. Incidentally I might add, you should make your hearts as smooth and soft as the hood of the snake. When God is revered, the world and all its poisonous fumes recede and you are restored to original health. Make the name and form of your chosen Lord dance upon the hood of your heart. Krishna had no attachment to sense objects (vishayavasana), so He could plunge into the pool, jump onto the hood of snake Kaliya, trample on it and squeeze the poison out. When you are deep in the mire, how can you pull out another who has fallen into it? Do not get caught. Save yourself only by calling on God, who is free from sense objects and is on the bank. Hold His hand, and He will pull you safe and keep you steady on the hard ground. (Divine Discourse, Sep 06, 1963)
TRUE SPIRITUALITY CONSISTS IN PROMOTING HUMAN UNITY THROUGH HARMONIOUS LIVING
AND SHARING THE JOY WITH ONE AND ALL. - BABA
பகவான் ஸ்ரீகிருஷ்ணர், காளிங்கன் என்ற பாம்பின் தலையில் நடனம் ஆடிய போது, அனைத்து விஷமும் வெளி வந்து, அந்தப் பாம்பு அடக்கப் பட்டது. நீங்களும் உங்களது இதயங்களை பாம்பின் மகுடத்தைப் போல மிருதுவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று இங்கு நான் மேலும் கூற விரும்புகிறேன். இறைவன் போற்றப் படும்போது, உலகமும், அதன் விஷவாயுக்களும் பின்வாங்கி விடும்; நீங்கள் உங்களது இயல்பான ஆரோக்யத்தைத் திரும்பப் பெறுவீர்கள். நீங்கள் உங்களது இஷ்ட தெய்வத்தின் ரூப, நாமங்களை உங்கள் இதயம் எனும் மகுடத்தில், நாட்டியமாடச் செய்யுங்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு புலன்களை ஈர்க்கும் விஷயங்களில் பற்றுதல் ( விஷயவாஸனா) இருந்ததில்லை; அதனால் தான் அவரால் அந்தக் குளத்தில் குதித்து, காளிங்கனின் மகுடத்தில் ஏறி, அதை மிதித்து,விஷத்தை வெளி வரச் செய்ய முடிந்தது. நீங்களே சேற்றில் ஆழ்ந்து கிடக்கும் போது, அதில் விழுந்த மற்றும் ஒருவரை நீங்கள் எவ்வாறு வெளியில் இழுத்துக் கொண்டு வர முடியும்? நீங்கள் மாட்டிக் கொள்ளாதீர்கள்.புலன்களை ஈர்க்கும் விஷயங்களில் பற்றின்றி கரையில் இருக்கும், இறைவனை மட்டுமே கூவி அழைத்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அவனது கரத்தை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள், அவன் உங்களை பத்திரமாக வெளியில் இழுத்து வந்து, கரையில் நிலையாக நிற்கச் செய்வான்.
உண்மையான ஆன்மீகம் என்பது, இசைவான வாழ்க்கை நடத்தி, எல்லோருடனும் ஆனந்தத்தைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், மனித குல ஒற்றுமையை அபிவிருத்தி செய்வதில் தான் இருக்கிறது - பாபா