azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 09 May 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 09 May 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

From today onwards, develop noble feelings. Follow the sacred path. Then your future will certainly be safe and secure. When I see all of you, My heart overflows with bliss (ananda). Happiness lies in union with God. Hence contemplate on God incessantly. Never give scope for anxiety or worry. Do not think, “Will I pass in the examinations?” Under any circumstances, do not give chance for despair and despondency. Do not have weak thoughts or negative attitude. Have faith in God. Sincere prayers to God will help you achieve anything in life. Pray earnestly every day. Take efforts to instill strong faith and devotion within you and share it with your fellow human beings. Do your duty and face any situation with courage. Then, the result is bound to be good. That will make God very happy. Love is God. Live in love. I am always with you, in you, above you and around you. (Divine Discourse, Jan 14, 2006)
PRAYER ALONE MAKES LIFE HAPPY, HARMONIOUS AND WORTH LIVING IN THIS UNIVERSE. - BABA
இன்றிலிருந்து சீரிய உணர்வுகளை அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள். புனிதமான பாதையைப் பின்பற்றுங்கள். பின்னர், உங்களது எதிர்காலம், நிச்சயம் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் இருக்கும். உங்கள் அனைவரையும் காணும் போது, எனது இதயம் ஆனந்தத்தால் பொங்கி வழிகிறது.இறைவனுடன் ஒன்றரக் கலப்பதில் தான் ஆனந்தம் இருக்கிறது.எனவே, இறைவனை இடையறாது தியானியுங்கள். ஒருபோதும், கலக்கத்திற்கோ அல்லது கவலைக்கோ இடமளிக்காதீர்கள். ‘’ நான் இந்தப் பரீட்சைகளில் தேர்வு பெறுவேனா ?’’ என எண்ணாதீர்கள். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், மனச்சோர்வுக்கும், விரக்திக்கும் வாய்ப்பளிக்காதீர்கள். பலஹீனமான சிந்தனைகள் அல்லது எதிர்மறையான மனப்பாங்கினைக் கொண்டு இருக்காதீர்கள். இறைவன் பால் நம்பிக்கை வையுங்கள்.இறைவனிடம் ஆத்மார்த்தமாகப் பிரார்த்திப்பது வாழ்க்கையில் எதையும் சாதிக்க உதவும். ஒவ்வொரு நாளும் மனப்பூர்வமாகப் பிரார்த்தியுங்கள். வலிமையான நம்பிக்கை மற்றும் பக்தியை உங்களுள் உண்டாக்கிக் கொள்ள முயற்சி செய்து, அதை உங்களது சக மனிதர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.உங்களது கடமையை ஆற்றி, எந்த சூழ்நிலையையும் தைரியமாக எதிர் கொள்ளுங்கள். பின்னர், விளைவுகள் நல்லதாகத் தான் இருக்கும். அது இறைவனை மிகவும் மகிழ்விக்கும்.ப்ரேமையே இறைவன், ப்ரேமையில் வாழுங்கள். நான் எப்போதும் உங்களுடன்,உங்களுக்குள், உங்களுக்கு மேல், உங்களைச் சுற்றி இருப்பேன்.
இந்த பிரபஞ்சத்தில், பிரார்த்தனை மட்டுமே வாழ்க்கையை சந்தோஷமானதாகவும், இசைவானதாகவும்,
வாழ உகந்ததாகவும் ஆக்குகிறது - பாபா