azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 04 May 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 04 May 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Merely having a human form does not make one a human being; it is the conduct and behaviour that matters, isn’t it? In the same manner, mere acquisition of bookish knowledge does not make one truly educated. Such worldly education is negative in nature. One must make a distinction between education and educare. Education is limited to physical and mental levels. While education is information-oriented, educare is transformation-oriented. Just as the rivers like Krishna and Godavari have their source in the ocean, education has its roots in educare. Physical and worldly knowledge corresponds to education. Educare is related to our inner feelings and purity of heart. Our matta, patta and batta (speech, song, and way of life) should originate from the heart. That is the essence of educare. Even if you acquire a number of degrees, if you lack purity of heart, you cannot be called truly educated. (Divine Discourse, Jan 14, 2006)
THE END OF KNOWLEDGE IS LOVE. THE END OF EDUCATION IS CHARACTER. - BABA
வெறும் மனித உருவம் பெற்றிருப்பதால் மட்டும் ஒருவர், ஒரு மனிதனாக முடியாது; பழக்கமும், நடத்தையுமே பிரதானம் , இல்லையா? அதைப் போலவே, வெறும் புத்தக அறிவைப் பெறுவது மட்டுமே, ஒருவரை உண்மையிலேயே கற்றவராக ஆக்குவதில்லை. இப்படிப் பட்ட உலகியலான கல்வி எதிர்மறையான இயல்பை உடையதாகும். ஒருவர், கல்விக்கும், விழுக்கல்விக்கும் இடையே உள்ள ஒரு வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.கல்வி என்பது பௌதீகமான மற்றும் மனத்தளவிலான நிலைக்கு உட்பட்டது.கல்வி என்பது தகவல்களைச் சார்ந்தது; விழுக்கல்வி என்பது மனமாற்றத்தைச் சார்ந்தது. எவ்வாறு, கிருஷ்ணா மற்றும் கோதாவரி போன்ற நதிகளுக்கு மூலாதாரம் சமுத்திரத்தில் உள்ளதோ, அவ்வாறே, கல்வியின் ஆணிவேர்கள் விழுக்கல்வியிலேயே உள்ளன. பௌதீகமான மற்றும் உலகியலான அறிவு, கல்விக்கு ஒத்தது. விழுக்கல்வி என்பது நமது உள்ளார்ந்த உணர்வுகள் மற்றும் இதயத்தூய்மையுடன் சம்பந்தப் பட்டது. நமது மாட்ட, பாட்ட மற்றும் பாட்ட ( பேச்சு, பாட்டு மற்றும் வாழ்க்கைப் பாதை) இதயத்திலிருந்து எழ வேண்டும். அதுவே விழுக்கல்வியின் சாரம். நீங்கள், பல பட்டங்களைப் பெற்றிருந்தாலும், உங்களுக்கு இதயத் தூய்மை இல்லை என்றால், உங்களை உண்மையில் கற்றவர் எனக் கூற முடியாது.
அறிவின் முடிவு ப்ரேமையாகும்.கல்வியின் முடிவு நற்குண நலனாகும் - பாபா