azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 01 May 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 01 May 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Service has become a word of common currency, but its value is very much reduced by the hypocrisy of the users. Really speaking, only those who are afflicted with agony at the sight of pain and suffering, distress or disease, have the right to offer service; for, they are not serving others, they are serving themselves, serving to remove as quickly and as intelligently as they can, their own agony. Service to others is the medicine one needs for oneself to alleviate the distress which fills one at the sight of distress in another being. Feel that you are serving yourself, that you are curbing your own ego. Otherwise service heightens your self-esteem and develops a sense of superiority, which are both harmful spiritually. (Divine Discourse, Apr 21, 1967)
BEING FREE FROM ENVY IS CULTIVATING DIVINITY. YOU MUST FEEL HAPPY
WHEN OTHERS' HAPPINESS OR SUCCESS. - BABA
சேவை என்பது ஒரு சகஜமான வார்த்தையாகி விட்டது; ஆனால், அந்த வார்த்தையைப் பயன்படுத்துபவர்களின் போலித்தனத்தால், அதன் மதிப்பு வெகுவாகக் குறைந்து விட்டது.உண்மையைக் கூற வேண்டும் என்றால், துன்பம் மற்றும் துயரம், வேதனை அல்லது வியாதி ஆகியவற்றைக் கண்டவுடனேயே, அதனால் பாதிக்கப்பட்டு வேதனையால் வாடுபவர்களுக்கு மட்டுமே, சேவை ஆற்றுவதற்கான உரிமை இருக்கிறது; ஏனென்றால், தாங்கள் படும் வேதனையை எவ்வளவு விரைவாகவும், புத்திசாலித்தனமாகவும் தங்களால் நீக்க முடியும் என்பதற்காக, அவர்கள் பிறர்க்கு அல்ல, தங்களுக்கே தான், சேவை ஆற்றிக் கொள்கிறார்கள். பிறருக்கு ஆற்றும் சேவையே, மற்றும் ஒரு ஜீவராசியின் கஷ்டத்தைக் கண்டவுடன், ஒருவர் படும் துயரத்தைத் துடைப்பதற்கு , அவருக்கே தேவைப்படும் மருந்தாகும். நீங்கள் உங்களுக்கே சேவை ஆற்றிக் கொள்கிறீர்கள் என்றும், உங்களது சொந்த அகந்தையைத் தடுக்கிறீர்கள் என்றும் உணருங்கள். இல்லை என்றால், சேவை உங்களது சுய கௌரவத்தை உயர்த்தி, தான் உயர்ந்தவன் என்ற உணர்வை வளர்த்து விடும்; இந்த இரண்டுமே ஆன்மீகத்திற்கு குந்தகம் விளைவிப்பவையே.
பொறாமை இன்றி இருப்பதே, தெய்வீகத்தை வளர்ப்பதாகும். பிறரது சந்தோஷம் அல்லது வெற்றியைக் கண்டு, நீங்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும்- பாபா