azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 26 Apr 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 26 Apr 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

I feel hurt when anyone calls India deficient or poor. It may be that some people are unaware of the methods of becoming rich or may not care to adopt them. But most people know the means of getting inner peace. You should demonstrate through your lives that spiritual discipline makes one happier and more courageous to fight the battle of life. This is your great good fortune, indeed. The world is suffering today from too much knowledge; virtue has not increased in proportion to the advances of knowledge. That is the root cause of the misery in human society. Of the two tyres of the vehicle that humanity is riding, the tyre of Divinity (Brahman) is flat, and it must be filled by pumping the Lord’s Name into it. You cannot drive very far with a flat tyre. Therefore, join holy association, cultivate good activities, and derive joy therefrom! (Divine Discourse, Apr 30, 1961)
TO EXPERIENCE THE PROXIMITY OF THE DIVINE THE EASIEST PATH IS NAMASMARANA,
REMEMBERING CONSTANTLY THE NAME OF THE LORD. - BABA
இந்தியாவை யாராவது, குறைபாடான அல்லது ஏழை நாடு என்று கூறினால், நான் வேதனை அடைகிறேன். ஒரு வேளை, சிலர் பணக்காரராக ஆவதற்கான முறைகளைப் பற்றி அறியாதவர்களாகவோ அல்லது அவற்றை ஏற்றுக் கொள்வதைப் பற்றி அக்கறை இல்லாதவர்களாக இருக்கலாம். ஆனால், பலர் அகச் சாந்தியை அடைவதற்கான முறைகளை அறிந்தவர்களாக இருக்கிறார்கள். ஆன்மீகக் கட்டுப்பாடே, ஒருவரை மகிழ்ச்சியானவராகவும், வாழ்க்கைப் போராட்டத்தை சமாளிக்க அதிக தைரியம் படைத்தவர்களாகவும் ஆக்குகிறது என்பதை நீங்கள் உங்களது வாழ்க்கையின் மூலம், எடுத்துக் காட்ட வேண்டும். இது உண்மையிலேயே உங்களது மிகப் பெரிய அதிருஷ்டம். உலகம், இன்று மிக அதிகமான அறிவால் துன்பப்பட்டுக் கொண்டு இருக்கிறது; அறிவின் முன்னேற்றத்திற்கு ஏற்ற அளவு, நல்லொழுக்கம் முன்னேறவில்லை. மனித குலத்தின் வேதனைக்கு அதுவே அடிப்படைக் காரணம்.மனித குலம் சென்று கொண்டிருக்கும் வண்டியின் இரண்டு சக்கரங்களில் ஒன்றான தெய்வீகம் ( பரப்ரம்மம்) காற்றின்றி இருக்கிறது; அதில் இறை நாமத்தைச் செலுத்தி, நிரப்ப வேண்டும். காற்றற்ற ஒரு சக்கரத்தை வைத்துக் கொண்டு, நீங்கள் வெகு தூரம் செல்ல முடியாது. எனவே, ஆன்றோரின் நட்பு வட்டத்தில் சேர்ந்து, நற்செயல்களை வளர்த்துக் கொண்டு, அதிலிருந்து ஆனந்தத்தை அடையுங்கள்!
இறைநாமத்தை,இடையறாது நினைவு கூறும், நாமஸ்ரணையே , இறைவனது அருகாமையை அனுபவிப்பதற்கான மிகவும் எளிதான வழியாகும் - பாபா