azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 24 Apr 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 24 Apr 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Incarnation is for the sake of fostering righteousness (dharma), for demarcating and directing it, and to show mankind the true path of desireless activity. The doctor first diagnoses the disease. Then he prescribes the course of treatment. So too, you must submit yourself to the diagnosis of your illness, viz. misery, travail, and pain. Investigate fearlessly and with care, and you will find that while your basic nature is bliss, you have falsely identified yourself with the temporary, the frivolous, the paltry, and that attachment has brought you all the sorrow. You must realise that both joy and sorrow are passing phases, like white or dark clouds across the blue sky, and you have to learn to treat both prosperity and adversity with equanimity. If only time is well spent, the ignorant (pamara) can become an ascetic of the highest order (Paramahamsa) and that ascetic can also become one with the Lord, the Universal Substance and Substratum (Paramatma). (Divine Discourse, Nov 23, 1961)
SELF-REALISATION IS THE GOAL. LOVE IS THE MEANS. - BABA
அவதாரங்கள், தர்மத்தைப் பேணிக் காத்து,அதை வரையறுத்து, வழிநடத்தி, மனித குலத்திற்கு, ஆசைகளற்ற செயல்முறையின் உண்மையான பாதையை எடுத்துக் காட்டுவதற்காகவே நிகழ்கின்றன. மருத்துவர், வியாதி என்ன என்று முதலில் கண்டறிகிறார். பின்னர், அதற்கான சிகிச்சை வழிமுறைகளை அறிவுறுத்துகிறார். அதைப் போலவே, உங்களது வியாதி, அதாவது துன்பம், வருத்தம், வேதனை ஆகியவை எதனால் என்பதைக் கண்டறிய உங்களை நீங்களே சமர்ப்பிக்க வேண்டும். அச்சமின்றியும், கவனமாகவும் ஆராயுங்கள்; உங்களது உண்மை நிலை பேரானந்தமாக இருந்தாலும் கூட, நீங்கள் உங்களையே தவறாக , தாற்காலிகமான, அற்ப மற்றும் முக்கியத்துவம் அற்றவைகளோடு இனம் கண்டு கொண்டுள்ளீர்கள்; இந்தப் பற்றுதலே உங்களுக்கு அனைத்து வேதனைகளையும் தந்துள்ளது என்பதைக் காண்பீர்கள். சந்தோஷமும், துக்கமும், நீல நிற வானத்தில் தோன்றும் வெண்மையான அல்லது கருப்பான மேகங்களைப் போன்று கலைந்து விடும் நிலைகள் என்பதையும், வளமையையும், வறுமையையும், சமச்சீரான மனப்பாங்குடன் கையாள நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும் நீங்கள் உணர வேண்டும். காலம் நல்ல முறையில் செலவிடப் பட்டால், பாமரனும், தலைசிறந்த துறவி நிலையான ஒரு பரமஹம்ஸராக ஆக முடியும்; அந்தப் பரமஹம்ஸரும் கூட, இந்த பிரபஞ்சத்தின் சாரமும், ஆதாரமும் ஆன பரமாத்மாவுடன் ஒன்றரக் கலக்கவும் முடியும்.
ஆத்ம சாக்ஷாத்காரமே குறிக்கோள். அன்பே அதற்கான வழி- பாபா