azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 21 Apr 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 21 Apr 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

In the pursuit of the good and godly life, one may encounter many difficulties and disturbances. Those who hate others will ultimately be consumed by their own hatred. Many doubts and questions crop up. It is only when all difficulties are faced squarely and the troubles are borne with patience and fortitude that we can understand the true nature of Reality. The transforming power of Love is boundless. St. Paul, who was originally an inveterate critic of Jesus, was transformed by Christ's love into the greatest apostle of Jesus. Pure Love will never submit to the forces of envy or hatred however powerful they may be. Selfless Love will prevail over them for sure. You should not allow yourselves to be overwhelmed in any way by difficulties and sorrows, doubts and disappointments. You must have faith. Have confidence in yourself and strive to understand well the nature of God's love. To secure that love is the sacred goal of human life. (Divine Discourse, Dec 25, 1984)
PURE LOVE IS THE KEY TO OPEN THE DOORS LOCKED BY EGOISM AND GREED. - BABA
நல்ல மற்றும் தெய்வீகமான வாழ்க்கையை நாடும் போது,ஒருவர் பல கஷ்டங்களையும், குழப்பங்களையும் எதிர் கொள்ள நேரிடலாம். பிறரை வெறுப்பவர்கள், இறுதியில் அவர்களது சொந்த வெறுப்பிற்கே இரையாகி விடுவார்கள். பல சந்தேகங்களும், கேள்விகளும் எழும். அனைத்து கஷ்டங்களையும் நேரடியாக எதிர்கொண்டு, துன்பங்களை பொறுமை மற்றும் சகிப்புத் தன்மையுடன் பொறுத்துக் கொண்டால் மட்டுமே, நாம், உண்மை நிலையின் சத்யத்தைப் புரிந்து கொள்ள முடியும். ப்ரேமைக்கு உள்ள, மனமாற்றம் செய்யும் சக்தி அபரிமிதமானது. முதலில் கண்மூடித் தனமாக ஏசு பிரானை விமரிசித்த, புனித பால் அவர்கள், ஏசு பிரானின் ப்ரேமையால், அவரின் தலைசிறந்த சீடராக மாற்றப் பட்டார். அது எவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருந்தாலும், பொறாமை அல்லது வெறுப்பின் சக்திகளுக்கு ஒரு போதும், பரிசுத்தமான ப்ரேமை அடி பணியாது. தன்னலமற்ற ப்ரேமை அவற்றைக் கண்டிப்பாக வென்று விடும். துன்பங்கள் மற்றும் துயரங்கள்,சந்தேகங்கள் மற்றும் ஏமாற்றங்கள் ஆகியவற்றால், உங்களை நீங்களே எந்த விதத்திலும் ஆழ்த்திக் கொள்ள அனுமதிக்கக் கூடாது. உங்களுக்கு இறை நம்பிக்கை இருக்க வேண்டும். உங்கள் மீதே நீங்கள் நம்பிக்கை வைத்து,இறைவனது ப்ரேமையின் இயல்பைப் புரிந்து கொள்ளப் பாடுபட வேண்டும். அந்த ப்ரேமையை அடைவதே மனித வாழ்க்கையின் புனிதமான குறிக்கோள் ஆகும்.
பரிசுத்தமான ப்ரேமையே,அகந்தை மற்றும் பேராசையால் மூடப்பட்டுள்ள கதவுகளை திறக்க வல்ல சாவியாகும் - பாபா