azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 20 Apr 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 20 Apr 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Love is another name for Dharma (Righteousness). True Love is priceless. It has no trace of selfishness in it. It does not change with time. It is pure and unsullied. It always grows and never diminishes. It is spontaneous. God’s love is spontaneous; it is free from selfishness, unwavering and always full. Ordinary human love is motivated by selfish considerations. It is liable to change owing to changes in time and circumstance. For persons immersed in selfish love, it is difficult to comprehend or realise the greatness of Selfless Divine Love. Love wears the mantle of Truth. And one wedded to Truth is ever young and vigorous, says the Hindu scriptures. The Bible also declares that the body gets fortified by adherence to Truth. Truth should not be confined to speech. It must express itself in action. Only the one who is truthful in word and deed can be esteemed as a genuine human being, says Prophet Mohammed. (Divine Discourse, Dec 25, 1984)
THERE IS NO NOBLER QUALITY IN THE WORLD THAN LOVE. IT IS WISDOM.
IT IS RIGHTEOUSNESS. IT IS WEALTH. IT IS TRUTH. - BABA
தர்மத்தின் மற்றொரு பெயரே ப்ரேமை.உண்மையான ப்ரேமை விலை மதிப்பற்றது. அதில் சுயநலத்தின் ஒரு சுவடு கூட இருப்பதில்லை.அது காலத்தால் மாறாதது. அது பரிசுத்தமானதும், களங்கமற்றதும் ஆகும்.அது எப்போதும் வளருமே தவிர ஒரு போதும் குறைவதில்லை. அது தன்னிச்சையாக எழுவது. இறைவனது ப்ரேமையும் தன்னிச்சையாகத் தோன்றுவதே;அது சுயநலமற்றதும், அசைக்க முடியாததும், எப்போதும் பரிபூரணமானதும் ஆகும். சாதாரண மனிதனின் ப்ரேமை, சுயநல சிந்தனைகளால் உந்தப்படுகிறது. அது கால, தேச பரிமாற்றங்களால் மாறக் கூடியது. சுயநலமான ப்ரேமையில் மூழ்கி இருக்கும் மனிதர்களுக்கு, தன்னலமற்ற தெய்வீக ப்ரேமையின் மாட்சிமையைப் புரிந்து கொள்வதோ அல்லது உணருவதோ கடினமே. ப்ரேமை, சத்யத்தின் கவசத்தை அணிந்துள்ளது. இந்துப் புனித நூல்கள், சத்யத்தைப் பற்றி ஒழுகும் ஒருவர் எப்போதும் இளமையாகவும், உயிர்துடிப்புள்ளவராகவும் இருப்பார், என்கின்றன. புனித பைபிளும், சத்யத்தைக் கடைப்பிடிப்பதனால், உடல் உறுதி பெறுகிறது என்று பறைசாற்றுகிறது. சத்யம், வாக்கோடு நின்று விட்டால் மட்டும் போதாது. அது , செயலிலும் தன்னை வெளிப்படுத்த வேண்டும். சொல் மற்றும் செயலில், சத்யமாக இருக்கும் ஒருவரை மட்டுமே, உண்மையான ஒரு மனிதனாகப் போற்ற வேண்டும் என்கிறார் முகமது நபி அவர்கள்.
அன்பை விட சீரிய குணம் இந்த உலகில் எதுவும் இல்லை. அன்பே ஞானம். அன்பே தர்மம். அன்பே செல்வமும், சத்தியமும் ஆகும் - பாபா