azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 17 Apr 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 17 Apr 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Make every effort to understand the greatness of your ancient culture and traditions. Respect everyone. Never be rude to elders or guests who visit your house. Whether your parents are at home or not, offer your guests a seat and give them a glass of cold water or buttermilk. Speak to them with love. How many children are following such noble practices in the present times? Even when you speak on the phone, you should talk in a loving and respectful manner. Respect does not mean merely saying, 'hello'. You should offer your namaskara (salutations) with humility and reverence. Na-maskara means offering respects without a trace of ahamkara and mamakara (ego and attachment). Our scriptures advise you to revere your mother, father, preceptor and guest as God. Cultivate and practice humility, love and reverence like the ancient Bharatiyas. That is the true sign of an educated person. (Divine Discourse, Apr 15, 2003)
IT IS FROM THE HOUSE THAT THE HUMAN VALUES ORIGINATE, BLOSSOM AND
FOSTER THE SACRED CULTURE. - BABA
உங்களது பண்டைய கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் மேன்மையைப் புரிந்து கொள்ள, அனைத்து முயற்சியையும் செய்யுங்கள். அனைவரையும் மதியுங்கள். உங்கள் இல்லத்திற்கு வருகை தரும் பெரியோர்கள் அல்லது விருந்தினரிடம் மரியாதையின்றி நடந்து கொள்ளாதீர்கள்.உங்களது பெற்றோர்கள் வீட்டில் இருந்தாலும், இல்லாவிட்டாலும்,விருந்தினருக்கு அமர ஒரு இருக்கை அளித்து, ஒரு கோப்பை குளிர்ந்த நீரோ அல்லது மோரோ அளியுங்கள். அவர்களிடம் அன்பாகப் பேசுங்கள்.இக்காலத்தில், எவ்வளவு குழந்தைகள் இப்படிப் பட்ட சீரிய பழக்கங்களைப் பின்பற்றுகிறார்கள் ? நீங்கள் தொலைபேசியில் பேசினாலும் கூட, நீங்கள் ஒரு அன்பான மற்றும் மரியாதையான வகையில் பேச வேண்டும்.மரியாதை என்றால், வெறுமனே ‘’ ஹலோ’’ என்று சொல்வது மட்டுமல்ல. நீங்கள் உங்களது நமஸ்காரங்களை பணிவுடனும், பயபக்தியுடனும் செய்ய வேண்டும். நமஸ்காரம் என்றால், அஹங்காரமும், மமகாரமும் ( அகந்தை மற்றும் பற்றுதல்) இன்றி, மரியாதை செய்தல் என்று பொருள். நமது வேதங்கள், நீங்கள், தாய், தந்தை, குரு மற்றும் விருந்தினரை, இறைவனாகவே மதிக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றன. பண்டைய பாரதத்தினரைப் போல, பணிவு, ப்ரேமை மற்றும் பயபக்தியை வளர்த்துக் கொண்டு, கடைப்பிடியுங்கள். அதுவே, ஒரு கற்ற மனிதனின் உண்மையான அடையாளமாகும்.
இல்லத்தில் இருந்து தான் மனிதப் பண்புகள் தோன்றி, மலர்ந்து,
புனிதமான கலாசாரத்தை வளர்க்கின்றன - பாபா