azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 13 Apr 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 13 Apr 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Sri Rama's incarnation as a human being was for the purpose of promoting peace and happiness in the world. His Name is very significant. The three syllables 'R', 'A' and 'Ma' indicate the three causes for human birth, Papamu (sins one committed), Thapamu (troubles one experiences) and Ajnanamu (ignorance). ‘Ra’ represents the root letter for Fire (Agni), ‘Aa’ for Moon and ‘Ma’ for Sun. Agni destroys everything and reduces it to ashes. The letter ‘R’ is powerful to destroy all sins you have committed; The letter ‘Aa’ (symbolising the moon) has the powers of cooling the ‘fevers’ man suffers from and conferring peace on him; ‘Ma’ (Sun) dispels the darkness of ignorance and confers illumination of wisdom. Hence, the Name Rama has the triple power of destroying sins, conferring peace and dispelling ignorance. Chant the sweet name of Rama with a pure, unsullied heart, in a spirit of selfless devotion and redeem your lives by living up to Rama’s ideals. (Divine Discourse, Apr 14, 1989)
TRUE DEVOTION IS CONSTANT REMEMBRANCE AND MEDITATION OF THE CHOSEN LORD’S NAME, PRACTICING THE IDEALS THEY EXEMPLIFIED AND CHERISHING THEIR FORM IN THE HEART. - BABA
ஸ்ரீராமர், மனிதனாக அவதாரம் எடுத்து வந்ததன் நோக்கம் உலகில் சாந்தி, சந்தோஷங்களை அபிவிருத்தி செய்வதற்காகவே.அவரது திருநாமம், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் மூன்று எழுத்துக்களான, ‘’ர’’, ‘’அ ‘’ மற்றும் ‘’ம’’ , மனிதப் பிறவி ஏற்படுவதற்கான மூன்று காரணங்களான, பாபமு ( ஒருவர் செய்த பாவங்கள் ), தாபமு ( ஒருவர் அனுபவிக்கும் ஏக்கங்கள்) மற்றும் அக்ஞானமு ( அஞ்ஞானம் ), ஆகியவற்றைக் குறிக்கின்றன. ‘’ர ‘’என்பது நெருப்பையும் (அக்னி ), ‘’அ’’ சந்திரனையும், ‘’ம’’ சூரியனையும் குறிக்கும் மூல எழுத்துக்களாகும். அக்னி, அனைத்தையும் எரித்து சாம்பலாக்கி விடுகிறது.’’ர’’ என்ற எழுத்து, நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தையும். அழித்து விடும் சக்தி வாய்ந்தது ; ‘’அ’’ எனச் சந்திரனைக் குறிக்கும் எழுத்து மனிதன்அனுபவிக்கும் ‘’ஜூரங்களைக்’’ குளிரவைத்து, அவனுக்குச் சாந்தி அளிக்கும் சக்தி படைத்தது ; ‘’ம’’ (சூரியன்) , அஞ்ஞானம் எனும் இருளைப் போக்கி, ஞான ஒளியை அளிக்கிறது. எனவே, ஸ்ரீராம நாமம், பாவங்களை அழித்து,சாந்தியைக் கொடுத்து, அஞ்ஞானத்தை நீக்கும் மூன்று வித சக்தி கொண்டதாகும். இனிய ஸ்ரீராம நாமத்தை ஒரு தூய மற்றும் களங்கமற்ற இதயத்துடன், தன்னலமற்ற பக்தி உணர்வுடன் ஜபித்து, ஸ்ரீராமரின் இலட்சியங்களின் படி வாழ்ந்து, உங்களது பிறவிப் பயனைப் பெறுங்கள்.
தேர்ந்தெடுத்த இறை நாமத்தை இடையறாது எண்ணி தியானிப்பதும்,அவர் முன்னுதாரணமாக இருந்த லட்சியங்களைப் பின்பற்றி, அவரது திருநாமத்தை இதயத்தில் நேசிப்பதுமே , உண்மையான பக்தியாகும்- பாபா