azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 11 Apr 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 11 Apr 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Mother Gayatri has three aspects - Gayatri, Savitri, and Saraswati. Gayathri is the presiding deity of our senses; Savitri is the presiding deity of the life principle, and Saraswati is the presiding deity of speech. All these three are within the same Principle of Truth. Gayatri Mantra beings with, Om Bhur Bhuvah Suvah. Bhur means materialisation (body), bhuvah means vibration (life principle), and suvah means radiation representing the Atma. From a scientist’s point of view, matter can be converted into energy and vice versa. But in My view, matter and energy do not exist separately. These two are inseparable and interrelated. In fact, there is no matter in this world; wherever you see, you find only energy. Truth, Righteousness, Peace, and Forgiveness are all expressions of the Principle of Shakti (Energy). Truth is the primal cause. There is nothing other than this. All faculties of energy are present in this Truth. So, consider Truth as your mother and follow it. (Divine Discourse, Sep 25, 1998.)
THERE IS NO GREATER SPIRITUAL PRACTICE THAN ADHERING TO
THE PRINCIPLES OF TRUTH AND LOVE. - BABA
மாதா காயத்ரி மூன்று அம்சங்கள் உடையவள்- காயத்ரி,சாவித்ரி மற்றும் சரஸ்வதி. காயத்ரி, நமது புலன்களின் அதிதேவதை; சாவித்ரி, பிராணனின் அதிதேவதை, சரஸ்வதி வாக்கின் அதிதேவதை.இந்த மூன்றுமே ஒரே சத்திய தத்துவத்தின் உள் அமைந்தவை.காயத்ரி மந்திரம், ஓம் பூர் புவ ஸ்வ:, என்று ஆரம்பிக்கிறது. பூர் என்றால் உருவகம் ( உடல்), புவ என்றால் அதிர்வு ( பிராணன் ), ஸ்வ என்றால் ஆத்மாவைக் குறிக்கும் கதிர்வீச்சு. ஒரு விஞ்ஞானியின் கருத்துப்படி, பொருளை, சக்தியாகவும், சக்தியை பொருளாகவும் மாற்ற முடியும். ஆனால், என் கருத்தில் பொருளும், சக்தியும் தனித்தனியாக இருப்பதில்லை.இவை இரண்டும் பிரிக்க முடியாதவை மற்றும் ஒன்றுக்கொன்று சம்பந்தப் பட்டவை. உண்மையில், இந்த உலகில் பொருள் என்று எதுவுமே இல்லை; நீங்கள் எங்கு பார்த்தாலும், நீங்கள் சக்தியை மட்டுமே காண்பீர்கள். சத்யம், தர்மம், சாந்தி மற்றும் ப்ரேமை ஆகிய அனைத்தும் சக்தி தத்துவத்தின் வெளிப்பாடுகளே. சத்யமே முன் முதல் காரணம். இதைத் தவிர , வேறு எதுவும் இல்லை.சக்தியின் அனைத்து அம்சங்களும் இந்த சத்யத்தில் உள்ளன. எனவே, சத்யத்தை உங்கள் தாயாகவே கருதி, அதைப் பின்பற்றுங்கள்.
சத்யத்தையும், ப்ரேமையையும் பற்றி ஒழுவதைவிடச்
சிறந்த ஆன்மீக சாதனை வேறு எதுவும் இல்லை- பாபா