azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 26 Mar 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 26 Mar 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

The eagle is pestered by crows so long as it has a fish in its beak. They swish past that so they could steal the fish out of its mouth, pursuing the bird wherever it sits for a little rest. Finally when the eagle gives up the attachment to the fish and drops it from its beak, the crows fly away, leaving the eagle free. So leave off sense pleasures and the crows of pride, envy, malice, and hatred will fly away, for they want only carrion. The snake moves in curves and not in a straight line. Individuals too move in a crooked path when they follow the senses. Practise renunciation from now on so that you may set out on the journey when the call comes; you don't know when. Else at that moment, you will be in tears, when you think of the house you have built, the property you have accumulated, the fame you have amassed, and the trifles you have won. (Divine Discourse,Oct 10, 1964)
SO LONG AS ONE IS DOMINATED BY SENSE PLEASURES, IT CANNOT BE SAID
THAT THEIR SPIRITUAL LIFE HAS BEGUN. - BABA
தனது அலகில் மீனை வைத்துக் கொண்டு இருக்கும் வரை, காக்கைகள் , கழுகை விரட்டிக் கொண்டே இருக்கும்.அவை, அதனது வாயிலிருந்து மீனைப் பறித்துக் கொள்வதற்காக விர்ரென்று பறந்து வந்து, அந்தப் பறவை, சிறிது நேரம் இளைப்பாறுவதற்காக எங்கு அமர்ந்தாலும், அவை அதை விரட்டிக் கொண்டு இருக்கும். இறுதியாக, அது ,அந்த மீனின் மீது உள்ள பற்றுதலை விட்டு விட்டு, அதை தனது அலகில் இருந்து கீழே போட்டு விடுகிறது; காக்கைகள் , கழுகை விட்டு விட்டு,அதன் பின்னால் பறந்து சென்று விடுகின்றன. எனவே, புலனின்பங்களை விட்டு விடுங்கள்; லோப,மோஹ, மத, மாத்ஸர்யங்கள் எனும் காக்கைகள் பறந்து போய்விடும் ஏனெனில், அவைகளுக்குத் தேவை அழுகிய உடல்கள் மட்டுமே. பாம்பு, நேராக இல்லாமல், வளைந்து வளைந்து தான் செல்லும். தனி மனிதர்களும் கூட,அவர்கள் புலன்களைப் பின்பற்றினால், ஒரு கோணலான பாதையிலேயே செல்வார்கள். இறுதி அறை கூவல் வரும்போது, நீங்கள் அந்தப் பயணத்திற்குத் தயாராக இருப்பதற்கு ஏற்றவாறு, இப்போதிலிருந்தே, பற்றின்மையைக் கடைப்பிடியுங்கள். அது எப்போது நிகழும் என உங்களுக்குத் தெரியாது. இல்லை என்றால், அந்தத் தருணத்தில், நீங்கள் கட்டிய வீடு, நீங்கள் குவித்த செல்வம், நீங்கள் ஈட்டிய புகழ், நீங்கள் வென்ற அற்பமானவைகள் போன்றவற்றை எண்ணி, நீங்கள் கண்ணீர் வடிக்க வேண்டி இருக்கும்.
புலனின்பங்களின் ஆதிக்கத்தில் ஒருவர் இருக்கும் வரை, அவர்களது ஆன்மீக வாழ்க்கை தொடங்கி விட்டது எனக் கூற முடியாது - பாபா