azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 25 Mar 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 25 Mar 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

The nature of mind is pure. Sensory impressions colour and soil it with likes and dislikes. The mind of the animal is unaffected by the many attachments and attractions, aversions and dislikes that hamper and haunt the human mind. The latent impressions (vasanas) warp the mind that is already bent by blows and buffetings suffered, birth after birth. There is no use laying all the blame on the mind. It is a mere watchman. Impress upon the watchman that the Lord is your master, then it will obey not only the Lord who is your master but even the Lord’s friends and companions. Join satsang and see whether the mind continues to be stubborn. It will not disobey you then. It is all about training; if the watchman comes to know that you are unrelated to the Lord, he will disobey you and take to his own misadventures! If you are on the Lord’s side, the watchman becomes your aide! (Divine Discourse, Oct 24, 1961)
DEVOTION CALLS FOR UTILIZING THE MIND, SPEECH AND BODY TO WORSHIP THE LORD. - BABA
மனதின் இயல்பு தூய்மையானதே. புலன்களின் பதிப்புக்கள் அதற்கு சாயம் பூசி, அதை விருப்பு, வெறுப்புகளால் மாசு படுத்தி விடுகின்றன. மனித மனதிற்கு இடையூறு செய்து, அதை பீடிக்கும் பல பற்றுதல்கள் மற்றும் கவர்ச்சிகள், வெறுப்புகள் மற்றும் விருப்பமின்மை போன்றவைகளால், மிருகத்தின் மனம் பாதிக்கப் படுவதில்லை. ஜன்ம, ஜன்மமாக அனுபவித்த தாக்குதல்கள் மற்றும் அடிகளால் முன்பே வளைந்திருக்கும் மனதை, உள் உந்துதல்கள் ( வாஸனா), கோணலாக்கி விடுகின்றன. எல்லாவற்றிற்கும் மனதைக் குறை கூறுவதால் எந்தப் பயனும் இல்லை. அது வெறும் ஒரு காவல்காரனே. அந்தக் காவல்காரனின் மனதில் இறைவனே உங்கள் எஜமானன் என்பதை அழுத்தமாகப் பதித்து விடுங்கள்; பின்னர், அவன், உங்கள் எஜமானரான இறைவனை மட்டுமல்ல,இறைவனின் நண்பர்கள் மற்றும் சகாக்களையும் கூடப் பணிந்திடுவான். நல்லோர்களின் நட்பு வட்டத்தில் (ஸத்ஸங்கம்) சேர்ந்து விடுங்கள்; பின்னர் உங்கள் மனம் இன்னும் பிடிவாதமாகவே இருக்கிறதா என்று பாருங்கள். அதன் பின், அது உங்களுக்கு அடி பணியாமல் இருக்காது. அனைத்தும் பயிற்சியிலேயே இருக்கிறது; காவல்காரனுக்கு, உங்களுக்கும் ,இறைவனுக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிந்து விட்டால், அவன் உங்களுக்கு அடிபணியாது, தனக்கே சொந்தமான தவறான வழிகளில் இறங்கி விடுவான் ! நீங்கள், இறைவனது தரப்பில் இருந்தால், காவல்காரன் உங்கள் துணைவனாகி விடுகிறான் !
மனம், வாக்கு, காயம் ( உடல்) என்ற மூன்றையும்
இறை ஆராதனைக்குப் பயன்படுத்துவதே பக்தி- பாபா