azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 08 Mar 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 08 Mar 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

You might have heard some people say that I became Sai Baba when a scorpion stung Me! Well, I challenge anyone of you to get stung by scorpions and transform into Sai Baba. No, the scorpion had nothing to do with it! In fact, there was no scorpion at all! I came in response to the prayers of sages, saints, and spiritual aspirants for the restoration of dharma. When there is a sign of a little unrest, the police constable appears on the scene; if the mob gets unruly, the Inspector rushes in; and if it becomes violent, the Superintendent of Police has to be personally present on the scene to quell it. If, however, the situation waxes hot, the Inspector General (IG) has to make himself available, is it not? This is a situation in which the IG is taking over all charge of the situation. The sages, savants, saints, yogis and divine personalities have had their try, and they will all be cooperating in the task of reestablishing righteousness and clearing the path for the world to attain absolute peace. (Divine Discourse, Feb 23, 1958)
THE SPIRITUAL PATH IS THE PATH OF DETACHMENT, OF SENSE CONTROL,
OF RIGOROUS MIND TRAINING. - BABA
ஒரு தேள் என்னைக் கொட்டியதால், நான் சாய்பாபா ஆனேன் எனச் சிலர் கூறுவதை நீங்கள் கேட்டிருக்கக் கூடும் ! நல்லது, உங்களில் யாராவது தேளால் கொட்டப் பட்டு, சாய் பாபா ஆகிக் காட்டுங்கள் என நான் உங்களுக்குச் சவால் விடுகிறேன். இல்லை, தேளுக்கு, இதில் எந்த சம்பந்தமும் இல்லை ! உண்மையில், தேள் என்று எதுவுமே இல்லை ! தர்மத்தை மீண்டும் நிலை நாட்ட வேண்டும் என்ற, ரிஷிகள், முனிவர்கள் மற்றும் ஆன்மீக சாதகர்களின் பிரார்த்தனைகளை ஏற்று நான் வந்துள்ளேன். ஏதாவது, ஒரு சிறிய குழப்பம் தோன்றுவதற்கான அறிகுறி தென்பட்டால், ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் அந்த இடத்திற்கு வருகிறார்; கூட்டம், வெறித்தனமாக நடந்து கொண்டால், இன்ஸ்பெக்டர் விரைந்து வருகிறார்; அதுவே வன்முறையாக ஆகி விட்டால், போலீஸ் சூப்பரின்டென்டன்ட், அந்த இடத்திற்கு, அதை அடக்க, தானே வந்தாக வேண்டும். ஒரு வேளை, அந்த சந்தர்ப்பம் மேலும் தீவிரமானதாக ஆகி விட்டால், இன்ஸ்பெக்டர் ஜெனரலே ( ஐ.ஜி) அங்கு வந்தாக வேண்டி இருக்கிறது அல்லவா? இன்றைய சூழ்நிலையில், ஐ.ஜியே பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார். ரிஷிகள், ஆன்றோர்கள், முனிவர்கள், யோகிகள் மற்றும் தெய்வீகப் பிறவிகள் அனைவரும் தங்களது முயற்சியை செய்து பார்த்து விட்டார்கள் ; தர்மத்தை மீண்டும் நிலைநாட்டி, உலகம் பிரசாந்தியை அடைவதற்கான பாதையைச் செப்பனிடும் பணியில் அவர்கள் அனைவரும் ஒத்துழைக்கப் போகிறார்கள்.
ஆன்மீகப் பாதை என்பது,பற்றின்மை, புலனடக்கம்
மற்றும் தீவிர மனப்பயிற்சியின் பாதையாகும் - பாபா