azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 06 Mar 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 06 Mar 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Take a lump of salt and drop it in water. The salt dissolves soon and disappears, though we know it exists in every drop. The lump cannot be found, but we know its presence by tasting the water. Similarly, God is present everywhere, though invisible. But, He can be known by the taste. You are the taste, the Divine droplet. This is the Truth - ‘That thou Art’. A tree has a trunk covered with bark and myriad roots to feed it and hold it firm. It has branches spreading in all directions, tapering into twigs. It has millions of leaves which breathe and borrow energy from the Sun. It fulfills itself by attracting bees to fertilise the flowers into seeds. All this variety of colour, fragrance, taste, smell and softness, of strength, toughness and tenderness has emanated from one single seed. Similarly, all creation emanated from God. This is the reality. Be firm in that faith. (Divine Discourse, Jan 2, 1987)
JUST AS THERE IS OIL IN THE SESAME SEED, BUTTER IN MILK, FRAGRANCE IN FLOWER, TASTY JUICE IN THE FRUIT, AND FIRE IN WOOD, THERE IS DIVINITY IN THE VAST UNIVERSE. - BABA
ஒரு உப்புக் கட்டியை எடுத்து தண்ணீரில் போடுங்கள், அது ஒவ்வொரு துளியிலும் இருக்கிறது என்பதை நாம் அறிந்திருந்த போதிலும்,உப்பு, விரைவில் கரைந்து ,மறைந்து விடுகிறது. அந்த உப்புக் கட்டியைக் காண முடியாது, ஆனால் அது இருப்பதை, தண்ணீரைச் சுவைப்பதன் மூலம் , நாம் காணலாம். அதைப் போலவே, கண்களுக்குப் புலப்படாவிட்டாலும்,இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான். அவனை அந்தச் சுவையில் மூலம் தெரிந்து கொள்ளலாம். நீங்களே அந்த தெய்வீகமான நீர்த் துளி, நீங்களே அந்த சுவை. ‘’ நீங்கள் தான் அது ‘’ இதுவே சத்தியம். ஒரு மரத்தின் தண்டைச் சுற்றி பட்டையும், அதை உறுதியாக நிலத்தில் பதித்து,அதற்கு போஷாக்கு அளிக்கும் எண்ணற்ற வேர்களும் உள்ளன.அதற்கு, பல திசைகளில் பரந்து விரிந்து, குறுகலாக நீட்டிக் கொண்டிருக்கும் கிளைகளும் உள்ளன. சுவாசித்து, சூரியனிடமிருந்து சக்தியைப் பெற்றுத் தரும் லக்ஷக்கணக்கான இலைகளும் அதற்கு இருக்கின்றன. மலர்களை, மகரந்தச் சேர்க்கையின் மூலம் விதைகளாக மாற்றுவதற்கு தேனீக்களைக் கவர்ந்து, அது தன்னை பூரணமாக்கிக் கொள்கிறது. இந்த வண்ணங்கள், நறுமணம்,சுவை, மணம் மற்றும் இதம், வலிமை, உறுதி, மென்மை ஆகிய அனைத்தும், ஒரே ஒரு விதையிலிருந்து தோன்றியவையே. அதைப் போலவே, படைப்பனைத்தும்,பரந்தாமனிலிருந்து தோன்றியவையே. இதுவே உண்மை நிலை. இந்த நம்பிக்கையில் நிலையாக இருங்கள்.
எள்ளில் எண்ணெயைப் போல, பாலில் வெண்ணெயைப் போல, பூவில் நறுமணத்தைப் போல, பழத்தில் இனிய பழரசத்தைப் போல, விறகில் நெருப்பைப் போல, இந்தப் பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் தெய்வீகம் இருக்கிறது. - பாபா