azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 05 Mar 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 05 Mar 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

This all-pervading Universal Consciousness has been called Chit-Tapas. It is the highest consciousness which encompasses all other levels of consciousness and is the basis for all of them. That is the Shuddha Satwa (the all-effective Will), the Super Divine life. This is the Sai tatwa (the Sai Principle). It is omnipotent. There is nothing that is beyond its power. It is the embodiment of all powers. It should be everyone's aim to strive to recognise this Supreme Principle. There are some clearly defined methods for achieving this aim. One’s vision, which is now turned outward towards the phenomenal universe, should be turned inwards towards the Indwelling Spirit. One should manifest the Divine consciousness inherent in oneself. One should submit oneself to that consciousness as a spiritual discipline. This is called "Conscious Realisation of the Inner Divine." (Divine Discourse, Feb 16, 1988)
ALL SPIRITUAL PRACTICE MUST BE DIRECTED TO THE REMOVAL OF THE HUSK
AND THE REVELATION OF THE KERNEL. - BABA
அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்துள்ள பரமாத்மா சித்-தபஸ் எனப்படுகிறது. எல்லாவிதமான உள்ளுணர்வு நிலைகளை தன்னுள் அடக்கி, அவை அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கும் இது, மிக உயர்ந்த உள்ளுணர்வு நிலையாகும். இதுவே சுத்த சத்வம் எனும், தலை சிறந்த தெய்வீக வாழ்க்கையாகும். இதுவே,சாய் தத்துவமும் ஆகும். இது ஸர்வ வல்லமை படைத்தது. இந்த சக்திக்கு அப்பாற்பட்டது எதுவும் இல்லை. இதுவே அனைத்து சக்திகளின் திருவுருவமாகும். இந்த தத்துவத்தை உணர பாடுபடுவதே ஒவ்வொருவரின் குறிக்கோளாக இருக்க வேண்டும். இந்த குறிக்கோளை அடைவதற்குத் தெளிவாக வகுக்கப்பட்ட சில முறைகள் உள்ளன.இப்போது பொருட்களாலான உலகை நோக்கி இருக்கும் ஒருவரது பார்வையை, உள்ளுறையும் ஆத்மாவை நோக்கி உட்புறம் திருப்ப வேண்டும்.ஒருவருள் உறையும் தெய்வீக உள்ளுணர்வை வெளிப்படுத்த வேண்டும். ஒரு ஆன்மீக சாதனையாக, இந்த உள்ளுணர்விற்கு ஒருவர் தானே சரணாகதி ஆக வேண்டும். இதுவே, ’’ உள்ளார்ந்த தெய்வீகத்தை தானே முன் வந்து உணர்வது ‘’ எனப்படுகிறது.
அனைத்து ஆன்மீக சாதனைகளும், வெளியில் உள்ள உமியை நீக்கி, உள்ளுறையும் தெய்வீகம் எனும் தானியத்தை வெளிப்படுத்துவதை நோக்கி செலுத்தப் பட வேண்டும் - பாபா