azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 03 Mar 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 03 Mar 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

We have not only the Maha Shivaratri once a year, we have a Shivaratri every month dedicated to the worship of Shiva. And why is this ratri (night) so important? The night is dominated by the Moon. The Moon has 16 kalas (fractions of divine glory), and each day or rather night, during the dark fortnight, one fraction is reduced, until the entire Moon is annihilated on the New-Moon night. From then on, each night, a fraction is added, until the Moon is a full circle on the Full-Moon night. The Moon is the presiding deity of the mind; the mind waxes and wanes just like the Moon. Chandrama manaso jatha - Out of the mind of the Purusha (Supreme Being), the Moon was born. It must be remembered that the chief aim of all sadhana is to eliminate the mind and become an Amanaska. Then only can maya (illusion) be rent asunder and the reality revealed. (Divine Discourse, Shivaratri, Feb 1969)
EQUAL-MINDEDNESS IN LOSS AND GAIN IS TRUE SADHANA. - BABA
நமக்கு, வருடம் ஒருமுறை வரும் மஹா சிவராத்திரியைத் தவிர,சிவ வழிபாட்டிற்காக மாதம் ஒருமுறையும் ஒரு சிவராத்திரி உள்ளது.இந்த ராத்திரி ஏன் இவ்வளவு முக்கியமானது? இரவு, சந்திரனால் ஆக்ரமிக்கப் பட்ட ஒன்று. சந்திரனுக்கு 16 கலைகள் உள்ளன; ஒவ்வொரு நாளும் அதாவது இரவிலும், தேய் பிறையின் 15 நாட்களில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலையாகக் குறைந்து கொண்டே வந்து, அமாவாசை இரவு அன்று, சந்திரன் முழுவதுமாக தேய்ந்து விடுகிறது. அன்றிலிருந்து ஒவ்வொரு இரவும், ஒவ்வொரு கலையாகச் சேர்க்கப் பட்டு, பௌர்ணமி இரவு அன்று, சந்திரன் ஒரு முழு வட்டமாக வளர்ந்து விடுகிறது. சந்திரனே மனதிற்கு அதிபதி ஆகும்; மனமும், சந்திரனைப் போலவே, தேய்வதும், வளர்வதுமாக இருக்கிறது. சந்திரமா மனஸோ ஜாதஹ – சந்திரன் பரமாத்மாவின் மனதிலிருந்தே தோன்றிய ஒன்றாகும். அனைத்து ஆன்மீக சாதனைகளின் முக்கியக் குறிக்கோள் , மனதை முழுமையாக அழித்து, அமனஸ்க (மனமற்ற) நிலையை அடைவதே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதன் பிறகே, மாயையின் திரை விலக்கப் பட்டு, உண்மை நிலை வெளிப்படும்.
நஷ்டம் மற்றும் லாபத்தில், சமச்சீரான மனப்பாங்கைக் கொண்டிருப்பதே உண்மையான ஆன்மீக சாதனையாகும் - பாபா