azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 27 Feb 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 27 Feb 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Amongst all living beings, human birth is the rarest. Do not waste such a precious and rare opportunity. You will lose your humanness when you indulge in falsehood, injustice, and unrighteousness. Therefore have good thoughts, good speech and good vision. See good, do good and be good. This is the inner meaning of life. Suppose someone criticises you, you should think that this also is for your good. Whatever others may do, think that it is all for your own good. Perform all actions with the goal of redeeming your life. See to it that you do not lose your humanness under any circumstance. Lead your life always smilingly and blissfully. Perform all actions with good intentions. To perform good actions, your thoughts need to be good. When your mind is filled with good thoughts, all bad thoughts disappear. This leads to good health. Love all, serve all. If you adhere to these principles, you will always have good health. (Divine Discourse, Jul 3, 2008)
YOUR VISION WILL BECOME SANCTIFIED ONLY WHEN YOU DEVELOP
THE FEELING THAT ALL ARE THE EMBODIMENTS OF GOD - BABA
அனைத்து ஜீவராசிகளிலும், மனிதப் பிறவியே மிகவும் அரியதானதாகும். இப்படிப் பட்ட ஒரு விலைமதிப்பற்ற மற்றும் அரிய வாய்ப்பினை வீணடித்து விடாதீர்கள். நீங்கள் அசத்தியம்,அநீதி மற்றும் அதர்மத்தில் ஈடுபடும் போது, நீங்கள் உங்களது மனிதத்துவத்தை இழந்து விடுகிறீர்கள்.எனவே, நற்சிந்தனைகள், நல்ல பேச்சு, நல்ல பார்வைகள் ஆகியவைகளை உடையவராக இருங்கள். நல்லதையே கண்டு,நல்லதையே செய்து, நல்லவராக இருங்கள். இதுவே வாழ்க்கையின் உட்பொருளாகும். ஒருவேளை உங்களை யாராவது விமர்சித்தால், அதுவும் உங்களது நன்மைக்காகவே என எண்ணுங்கள். மற்றவர்கள் எதைச் செய்தாலும், அவை அனைத்தும் உங்களது நன்மைக்காகவே என எண்ணுங்கள். உங்களது வாழ்க்கையைப் புனிதப் படுத்தும் நோக்கத்துடன் அனைத்து செயல்களையும் ஆற்றுங்கள். எந்த சந்தர்ப்பத்திலும், உங்களது மனிதத்துவத்தை இழந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களது வாழ்க்கையை எப்போதும் புன்முறுவலுடனும், ஆனந்தமாகவும் நடத்துங்கள். அனைத்து செயல்களையும், நல்ல நோக்கங்களுடன் ஆற்றுங்கள். உங்கள் மனம் நற்சிந்தனைகளால் நிரம்பி இருக்கும் போது, அனைத்து தீய சிந்தனைகளும் மறைந்து விடும். இது நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு இட்டுச் செல்லும். அனைவரையும் நேசியுங்கள், அனைவருக்கும் சேவை ஆற்றுங்கள். நீங்கள் இந்தக் கோட்பாடுகளைப் பற்றி ஒழுகினால், உங்களுக்கு எப்போதும் நல்ல ஆரோக்கியம் இருக்கும்.
அனைவரும் ஆண்டவனது திருவுருவங்களே என்ற உணர்வை நீங்கள் வளர்த்துக் கொண்டால் மட்டுமே, உங்களது பார்வை புனிதமானதாக ஆகும் - பாபா