azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 23 Feb 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 23 Feb 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Detachment (vairagyam) is the first sign of a spiritual life. Without it you are an illiterate in spirituality. It’s the ‘ABC’ of spiritual effort. Detachment must become strong enough for you to discard the bondage of the senses. A few minutes of thought will help you see the hollowness of earthly riches, fame, and happiness. When you are adding more and more sums of money to your bank account, consider whether or not you are accumulating troubles for yourselves and your children, making it harder for your children to lead clean, comfortable, and honourable lives. When you struggle to achieve paltry fame by devious means, remember who among crores of your countrymen are honoured today and for what. Don’t you see that only those are honoured everywhere who gave up, renounced, and sought the more difficult road of God-realisation instead of the easier path of world-realisation? (Divine Discourse, Sep 8, 1963)
IF YOU TAKE ONE STEP TOWARD HIM, HE TAKES A HUNDRED STEPS TOWARDS YOU! - BABA
பற்றின்மையே, ஆன்மீக வாழ்க்கையின் முதல் படியாகும்.அது இன்றி, ஆன்மீகத்தில் நீங்கள் ஒரு படிப்பறிவு இல்லாதவரே. அதுவே ஆன்மீக சாதனையின்,‘’ அனா, ஆவன்னா ‘’ என்ற அறிச்சுவடி போன்றதாகும். புலன்களின் பிணைப்பை உதறித் தள்ளும் அளவிற்கு, பற்றின்மை வலுவள்ளதாக ஆக வேண்டும். ஒரு சில நிமிட சிந்தனை, உலகியலான வளமை, புகழ் மற்றும் சந்தோஷத்தின் வெற்றுத் தன்மையைப் புரிந்து கொள்ள உங்களுக்கு உதவும். நீங்கள், உங்களது வங்கிக் கணக்கில் மேலும் மேலும் பணத்தை சேர்த்துக் கொண்டே போகும் போது, உங்களது குழந்தைகள் ஒரு பரிசுத்தமான, சௌகரியமான மற்றும் கௌரவமான வாழ்க்கை நடத்துவதை மேலும் கடினமானதாக ஆக்குவதன் மூலம், உங்களுக்கும், உங்களது குழந்தைகளுக்கும் மேலும் மேலும் துன்பங்களைச் சேர்த்துக் கொண்டே போகிறீர்களா இல்லையா என்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள், குறுக்கு வழியில் அற்பமான புகழைத் தேடப் பாடுபடும் போது, உங்கள் நாட்டின் கோடிக்கணக்காண மக்களில், யார் இன்றும் கூட எதற்காக கௌரவிக்கப் படுகிறார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். அனைத்தையும் விடுத்து, துறவு மனப்பாங்குடன், உலகியலானவற்றை நாடுவதற்கு பதில், ஆத்ம சாக்ஷாத்காரத்தின் கடினமான பாதையை நாடியவர்கள் மட்டுமே, எங்கும் கௌரவிக்கப் படுகிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?
நீங்கள் அவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால்,
இறைவன் உங்களை நோக்கி, ஒரு நூறு அடி எடுத்து வைக்கிறான் !- பாபா