azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 07 Feb 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 07 Feb 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

In the Treta age, vanaras (monkeys) were made to act and talk like naras (humans). In the Dwapara age, nara (human) was transformed into Narayana (God) by the grace of Narayana. In the Kali age (the era we are in now), the declaration is made that the nara is Narayana Himself! The space in the pot and the space in the monastery are identical with the vast space in the sky; only the disguises of the pot and monastery keep up the illusion of separateness. The senses are the villains; they instill the delusion that you are the body. Curb them as the bull is curbed by the nose ring, the horse by the bit in the mouth, and the elephant by the goad. First self, then help. Improve yourself, teach yourself, reconstruct yourself. Then proceed to solve the problems of others. This reconstruction is quite easy, provided you inquire calmly into your own personality - “Am I the body or the senses or the mind or the intellect,” and so on. (Divine Discourse, Oct 26, 1963)
THE SPIRITUAL PATH IS THE PATH OF DETACHMENT,
OF SENSE CONTROL, OF RIGOROUS MIND TRAINING. - BABA
த்ரேதா யுகத்தில்,வானரர்கள் ( குரங்குகள் ), நரர்களைப் ( மனிதர்கள் )போல நடந்து கொள்ளவும், பேசுமாறும் செய்யப் பட்டார்கள்.துவாபர யுகத்தில், ஆண்டவனின் அருளால், நரன்( மனிதன்), நாராயணனாக ( இறைவன் ) மாற்றப் பட்டான். கலி யுகத்தில் ( நாம் இப்போது இருக்கும் யுகத்தில் ), நரனே, நாராயணன் என்று பறைசாற்றப் படுகிறது !குடத்தில் இருக்கும் வெளியும், விஹாரத்தில் இருக்கும் வெளியும், ஆகாயத்தில் இருக்கும் பரந்த வெளியை ஒத்ததே ; குடம் மற்றும் விஹாரம் என்ற மாறு வேடங்கள், அவை தனித்தனியானவை என்ற மாயையைத் தோற்றுவிக்கின்றன. புலன்களே வில்லன்கள்; அவை நீங்கள் உடலே என்ற மாயையை உட்புகுத்துகின்றன. மூக்கணாங்கயிற்றினால் காளையையும், கடிவாளத்தால் குதிரையையும், அங்குசத்தால் யானையையும் அடக்குவதைப் போல, அவற்றை அடக்கி வையுங்கள். முதலில் உங்களை கவனியுங்கள்; பின்னர் பிறருக்கு உதவுங்கள். உங்களை நீங்களே முன்னேற்றிக் கொண்டு, உங்களுக்கு நீங்களே போதித்துக் கொண்டு, உங்களை நீங்களே புனருத்தாரணம் செய்து கொள்ளுங்கள். அதன் பின் மற்றவர்களது பிரச்சனைகளைத் தீர்க்க விழையுங்கள். நீங்கள், உங்களது தனித் தன்மையை, ‘’ நான் உடலா அல்லது புலன்களா அல்லது மனமா அல்லது புத்தியா ‘’ என்றெல்லாம் அமைதியாக ஆராய்வீர்களேயானால், இந்த புனருத்தாரணம் மிகவும் சுலபமானதாகும்.
ஆன்மீகப் பாதை என்பது,பற்றின்மை, புலனடக்கம்
மற்றும் தீவிர மனப்பயிற்சியின் பாதையாகும் - பாபா