azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 01 Feb 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 01 Feb 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Do not count your tears of pain; do not sulk over your grief. Let them pass through your mind as birds fly through the sky leaving no trail behind; or as flames and floods appear on the screen in a movie hall without burning or dampening the screen. You must not lose heart when you are disappointed. Perhaps, your wish itself was wrong, or its realisation may have landed you in worse situations. Any way, it is the will of the Lord and He knows best. Disappointments and distress are like the skin of the plantain which is there to protect the taste and allow the sweetness to fill the fruit. In such dire straits, let your mind dwell on the splendour of the Divine Self (Atma) and its majesty; that will keep you alert and brave. The antics of the senses and the mind can be arrested by the whip of wisdom of the true Self (Atma jnana). (Divine Discourse, Jan 22, 1967)
WHATEVER BE YOUR TROUBLES, HOWEVER GREAT IS YOUR SORROW,
PERSIST AND WIN BY RECOLLECTING THE LORD. - BABA
உங்களது துன்பத்தின் கண்ணீர் துளிகளைக் கணக்கிடாதீர்கள்; உங்களது துயரத்தை எண்ணி வேதனைப்படாதீர்கள். பறவைகள் எவ்வாறு ஆகாயத்தில் எந்தச் சுவடையும் ஏற்படுத்தாமல் பறந்து செல்கின்றனவோ அல்லது திரையில் தோன்றும் தீக்கொழுந்துகளும், வெள்ளங்களும் எவ்வாறு அதை எரிக்காமலும், நனைக்காமலும் இருக்கின்றனவோ, அவ்வாறே அவை உங்கள் மனதில் கடந்து செல்லட்டும். நீங்கள் ஏமாற்றமடையும் போது, மனம் தளரக்கூடாது. ஒருவேளை, உங்களது ஆசையே தவறானதாக இருக்கக் கூடும் அல்லது அதைப் பெறுவது, உங்களை மேலும் மோசமான நிலைகளில் ஆழ்த்தி இருக்கக் கூடும். எதுவாக இருந்தாலும், அது இறைவனது ஸங்கல்பமே; அவனே எது சிறந்தது என அறிவான். ஏமாற்றங்களும், இடர்பாடுகளும், அதன் சுவையைக் காத்து, இனிமை, பழத்தை நிரப்புமாறு செய்யும் வாழைப் பழத் தோலைப் போன்றவை. இப்படிப் பட்ட நெருக்கடியான சமயங்களில், உங்கள் மனம் ஆத்ம ஜோதியையும், அதன் மாட்சிமையையும் தியானிக்கட்டும்; அது உங்களை எச்சரிக்கையாகவும், தைரியமாகவும் இருக்க வைக்கும்.புலன்கள் மற்றும் மனதின் கோமாளித்தனங்களை, ஆத்ம ஞானம் எனும் சாட்டையின் மூலம் தடுத்து நிறுத்த முடியும்.
உங்களது துன்பங்கள் எதுவானாலும்,உங்களது துயரம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், இடையறாத இறைநாமஸ்மரணையின் மூலம் வெற்றி பெறுங்கள்- பாபா