azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 31 Jan 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 31 Jan 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

All of you are wasting time. Time is God. God is described as, Kala kalaya namah - He is the Master of Time. Therefore you should not waste time on unnecessary activities. For example, excessive talk is a waste of time. When you switch on the radio and listen to all unnecessary programmes, electricity is wasted. The body is like a radio receiver. Chanting the Lord’s name and singing the glory of God will capture signals of grace. But when you indulge in unnecessary gossip, you waste precious time and energy. When you do wicked or inappropriate deeds, again you waste energy and incur dangerous consequences too. Sanctify your life by adhering to the twin ideals of Truth and Righteousness (Sathya and Dharma). Instead of preaching them, put them into practice. Propagation is 'quantity' while practicing is 'quality'. Quality is always very important. A spoon of cow's milk is much better than a barrel of donkey's milk. (Divine Discourse, Jul 18, 1997)
IF YOU ARE ENGAGED ALL THE TIME IN THE ACQUISITION OF INFORMATION,
WHEN WILL YOU UNDERTAKE THE TASK OF YOUR TRANSFORMATION? - BABA
நீங்கள் எல்லோரும் காலத்தை வீணடித்துக் கொண்டு இருக்கிறீர்கள். காலமே இறைவன். இறைவன் கால காலாய நமஹ- அவனே காலத்தின் அதிபதி எனப் போற்றப் படுகிறான்.எனவே, நீங்கள் தேவையற்ற செயல்களில், காலத்தை வீணடிக்கக் கூடாது. உதாரணமாக, மித மிஞ்சிய பேச்சே ஒரு கால விரயமாகும். நீங்கள் ரேடியோவை இயங்கச் செய்து அனைத்து அநாவசியமான நிகழ்ச்சிகளைக் கேட்கும் போது, மின்சாரம் வீணாகிறது. உடல் ஒரு ரேடியோவைப் போன்றது. இறைநாமஸ்மரணை செய்வதும், இறைவனது மாட்சிமையைப் பாடுவதும், இறை அருளின் சமிக்ஞைகளைக் கைப்பற்றித் தரும். ஆனால், நீங்கள் அநாவசியமான வம்புப் பேச்சில் ஈடுபடும் போது, விலைமதிப்பற்ற காலத்தையும், சக்தியையும் வீணடிக்கிறீர்கள். நீங்கள் கொடிய அல்லது பொருத்தமற்ற செயல்களைச் செய்யும் போது, நீங்கள் மறுபடியும் சக்தியை வீணடிப்பதோடு, பயங்கரமான விளைவுகளுக்கும் ஆளாகிறீர்கள். சத்தியம், தர்மம் என்ற இரட்டை இலட்சியங்களைப் பற்றி ஒழுகுவதன் மூலம் உங்களது வாழ்க்கையைப் புனிதமாக்கிக் கொள்ளுங்கள். அவைகளை உபதேசிப்பதற்குப் பதிலாக அவற்றை நடைமுறையில் கடைப்பிடியுங்கள். பரப்புவது ‘’ அளவு ‘’, ஆனால், கடைப்பிடிப்பது ‘’ தரம்‘’ ஆகும். தரமே எப்போதும் மிகவும் முக்கியமானதாகும். ஒரு கரண்டி பசும்பால், ஒரு பீப்பாய் கழுதைப்பாலை விட மிகவும் சிறந்ததே.
நீங்கள் எப்போதும் செய்திகளைச் சேகரிப்பதிலேயே ஈடுபட்டு இருந்தால், உங்கள் மனமாற்றம் என்ற பணியை எப்போது ஆற்றப்போகிறீர்கள் ? - பாபா