azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 22 Jan 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 22 Jan 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

The name ‘Rama’ is made up of three root letters (bijaksharas) associated with Fire, Sun and Moon. Symbolically, this means that by uttering the name of Rama, the fire principle will burn away one's sins, the sun principle will dispel the darkness of ignorance, and the moon principle will cool the fevers arising out of desires. Install the name firmly in your heart and sing with fervour. Do not treat community bhajans as a pastime. Singing should be vibrant, soulful, combining feeling (bhava), melody (raga) and rhythm (tala). It should not be dull, mechanical or uninspiring. When you join tens and hundreds in singing bhajans, sing full-throated, with purity of feeling and without any bother. Be fully absorbed in the devotional process and experience ecstasy of that experience. Picture the Lord in your heart and utter His Name - you will then feel the ecstasy and you will also evoke joy in others. When everyone sings with such unity, Divinity can be experienced. -Divine Discourse, Nov 8, 1986.
SINGING THE LORD’S NAME SHOULD BECOME AN EXERCISE
IN MUTUAL SHARING OF JOY AND HOLINESS. - BABA
“ ராமா ’’ என்ற நாமம்,அக்னி,சூரியன் மற்றும் சந்திரனோடு சம்பந்தப் பட்ட மூன்று பீஜாக்க்ஷரங்களால் ஆனது.இதன் பொருள்,ராம நாமத்தை ஜபிப்பதால், அக்னி தத்துவம் ஒருவரது பாவங்களை எரித்துப் பொசுக்கி விடும், சூரிய தத்துவம் அறியாமை எனும் இருளை நீக்கி விடும்,சந்திர தத்துவம் ஆசைகளால் எழும் ஜூரங்களைக் குளிர வைக்கும் என்பதாகும்.இந்த இறைநாமத்தை உங்கள் இதயத்தில் உறுதியாக நிலை நிறுத்திக் கொண்டு, உற்சாகமாகப் பாடுங்கள். கூட்டு பஜனையை ஒரு பொழுது போக்காக எடுத்துக் கொள்ளாதீர்கள். பாடுவது, துடிப்பானதாகவும்,ஆத்மார்த்தமானதாகவும்,பாவம்,ராகம் மற்றும் தாளத்தோடு இணைந்ததாகவும் இருக்க வேண்டும். அது மந்தமானதாகவோ, இயந்திர மயமானதாகவோ அல்லது உத்வேகமற்றதாகவோ இருக்கக் கூடாது. நீங்கள் நூற்றுக் கணக்காணவர்களோடு இணைந்து பஜன் பாடும்போது,உரத்த குரலிலும், பரிசுத்தமான உணர்வோடும், எந்தக் கவலை இன்றியும் பாடுங்கள். பக்தியில் முழுமையாக ஆழ்ந்து, அந்த நிகழ்வின் பரவசத்தை அனுபவியுங்கள். இறைவனது ரூபத்தை இதயத்தில் உருவகப் படுத்திக் கொண்டு அவனது திரு நாமத்தை உச்சரியுங்கள் –நீங்கள் பின்னர் அந்தப் பரவசத்தை உணருவதோடு, பிறருள்ளும் அந்த ஆனந்தத்தை வரவழைப்பீர்கள்.ஒவ்வொருவரும் இப்படிப் பட்ட ஒற்றுமையுடன் பாடும்போது, தெய்வீகத்தை அனுபவிக்க முடியும்.
இறைவனது திருநாமத்தைப் பாடுவது என்பது,
ஆனந்தம் மற்றும் புனிதத்துவத்தைப் பரஸ்பரம்
பரிமாறிக் கொள்ளும் ஒரு பயிற்சியாக ஆக வேண்டும் - பாபா