azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 20 Jan 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 20 Jan 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

In our daily experiences, there are a number of instances which reveal the existence of Divinity in every person. Consider a cinema; on the screen we see rivers in flood engulfing all the surrounding land. Even though the scene is filled with flood waters the screen does not get wet by even a drop of water. At another time, on the same screen we see volcanoes erupting with tongues of flame, but the screen is not burnt. The screen which provides the basis for all these pictures is not affected by any of them. Likewise in the life of man, good or bad, joy or sorrow, birth or death, will be coming and going, but they do not affect the Atma In the cinema of life, the screen is the Atma It is Shiva, it is Sankara, it is Divinity. When one understands this principle, one will be able to understand, enjoy and find fulfilment in life! Divine Discourse, Feb 17, 1985
HAVE NO DESIRES TO PLACE BEFORE GOD, FOR, WHATEVER HE DOES WITH YOU,
HOWEVER HE TREATS YOU, IS THE GIFT HE LIKES BEST TO GIVE YOU! - BABA
நமது அன்றாட அனுபவங்களில், ஒவ்வொருவருள்ளும் உறையும் தெய்வீகத்தை வெளிப்படுத்திக் காட்டும் பல நிகழ்வுகள் உள்ளன. ஒரு சினிமாவை எடுத்துக் கொள்ளுங்கள்; வெள்ளித் திரையில், ஆறுகளின் வெள்ளம், சுற்றியிருக்கும் நிலங்களை மூழ்கடிப்பதைக் காண்கிறோம். இந்தக் காட்சி முழுவதும் வெள்ள நீரில் மூழ்கி இருந்தாலும், வெள்ளித்திரை ஒரு துளி நீரால் கூட நனைவதில்லை. மற்றொரு சமயம், அதே திரையில்,எரிமலைகள் கொழுந்து விட்டு எரிவதை நாம் பார்க்கிறோம்; ஆனால் ,வெள்ளித் திரை எரிவதில்லை. இந்த அனைத்து படங்களுக்கும் ஆதாரமாக இருக்கும் வெள்ளித் திரை அவை எவற்றாலும் பாதிக்கப் படுவதில்லை. அதைப் போலவே, ஒரு மனிதனில் வாழ்க்கையில் நல்லவை அல்லது கெட்டவை,சுகம் அல்லது துக்கம், பிறப்பு அல்லது இறப்பு ஆகியவை வரும், போகும், ஆனால், அவை ஆத்மாவை பாதிப்பதில்லை. இந்த வாழ்க்கை எனும் சினிமாவில், ஆத்மாவே வெள்ளித் திரை. அதுவே சிவம், அதுவே சங்கரம், அதுவே தெய்வீகம். இந்த தத்துவத்தை ஒருவர் புரிந்து கொண்டு விட்டால், ஒருவர் வாழ்க்கையைப் புரிந்து கொண்டு, அதை சந்தோஷமாக அனுபவித்து, அதில் பூரணத்துவத்தைக் காண முடியும் !
இறைவன் முன் வைக்க வேண்டும் என்று எந்த ஆசையையும் வைத்துக் கொள்ளாதீர்கள்; ஏனெனில்,அவன் உங்களை என்ன செய்தாலும்,உங்களை எப்படி நடத்தினாலும், அதுவே அவன் உங்களுக்கு வழங்க விரும்பும் மிகச் சிறந்த பரிசாகும் - பாபா