azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 18 Jan 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 18 Jan 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

There is hardly anyone who is free from the vice of jealousy. Jealousy may arise even over very trivial matters and out of jealousy, hatred arises. To get rid of hatred one must constantly practise love. Where there is love, there will be no room for jealousy and hatred and where there is no jealousy and hatred, there is Ananda (real joy). This joy reveals itself in Beauty. "A thing of beauty is a joy for ever." If you see beauty in any thing, you will derive joy from it. But what is this beauty? Is the world beautiful? Are materials and objects beautiful? But these are temporary and their beauty too can only be temporary. Only God is permanent, so God alone can be said to be beautiful.The devotee's primary duty is to seek the nectar of bliss that is to be got from the contemplation of the beauty of God. The means of experiencing such joy is to cultivate good qualities and get rid of bad traits. [Divine Discourse, Sep 6, 1984]
TO RESURRECT LOVE AND COMPASSION, YOU MUST KILL JEALOUSY AND
SELFISHNESS AND PURIFY YOUR HEART. - BABA
பொறாமை என்ற தீய குணம் அற்றவர் எவருமே இல்லை எனலாம். மிக அற்பமான விஷயங்களில் கூட பொறாமை எழலாம்;பொறாமையிலிருந்து வெறுப்பு உருவாகிறது. வெறுப்பை விட்டு ஒழிக்க, ஒருவர் இடையறாது ப்ரேமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.எங்கு ப்ரேமை இருக்கிறதோ ,அங்கு பொறாமை மற்றும் வெறுப்பிற்கு இடமே இருக்காது; பொறாமை மற்றும் வெறுப்பு இல்லாத இடத்தில்,ஆனந்தம் இருக்கும்.இந்த ஆனந்தம் தன்னை சுந்தரத்தில் வெளிப்படுத்திக் காட்டுகிறது. ‘’சுந்தரமான ஒன்று, என்றும் ஆனந்தமே’’. நீங்கள் எதிலாவது சுந்தரத்தைக் கண்டால்,நீங்கள் அதிலிருந்து ஆனந்தத்தைப் பெறுகிறீர்கள். இந்த சுந்தரம் என்பது என்ன? இந்த உலகம் சுந்தரமானதா? பொருட்களும்,விஷயங்களும் சுந்தரமானவையா?ஆனால், இவை எல்லாம் தாற்காலிகமானவையே; அவற்றின் சுந்தரமும் கூட தாற்காலிகமானதே. இறைவன் ஒருவன் மட்டுமே நிரந்தரமானவன்; எனவே இறைவன் மட்டுமே சுந்தரமானவன் எனப்படுகிறான்.இறைவனின் சுந்தரத்தைத் தியானிப்பதில் இருந்து கிடைக்கும் ஆனந்தம் எனும் அமிர்தத்தை நாடுவதே ஒரு பக்தனின் தலையாய கடமையாகும். நற்குணங்களை வளர்த்துக் கொண்டு, தீய மனப்பாங்குகளை விட்டு ஒழிப்பதே , இப்படிப் பட்ட ஆனந்தத்தை அனுபவித்து மகிழ்வதற்கான வழியாகும்.
ப்ரேமையையும்,பரிவையும்,புணருத்தாரணம் செய்வதற்கு, நீங்கள் பொறாமையையும், சுயநலத்தையும் அழித்து, உங்கள் இதயத்தை பரிசுத்தமாக்கிக் கொள்ள வேண்டும் - பாபா