azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 17 Jan 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 17 Jan 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

If there is a boil on the body, we apply some ointment on it and cover it with a bandage until it completely heals. If you do not apply the ointment and tie the bandage around this boil, it is likely to become septic and cause great harm later on. Now and then we will have to clean it with pure water, apply the ointment again, and put on a new bandage. In the same way, in our life too there is this boil which has erupted in our body in the form of this feeling, 'I, I, I'. If you want to really cure this boil of this 'I', you must wash it every day with the waters of love, apply the ointment of faith on it and tie the bandage of humility around it. The bandage of humility, the ointment of faith, and the waters of love will be able to cure this disease that has erupted with this boil of 'I'. - Divine Discourse, Feb 17, 1985.
PURE LOVE IS SELFLESS-NESS AND SELFISHNESS IS LOVELESS-NESS. - BABA
உடலில் ஒரு கொப்புளம் இருந்தால், நாம் அதன் மீது ஒரு களிம்பைத் தடவி, அது ஆறும் வரை, அதைச் சுற்றி ஒரு கட்டுப் போடுகிறோம். நீங்கள் , களிம்பைத் தடவிக் கட்டுப் போடாமல் இருந்தால், அது புரையோடி, பின்னர் மிகுந்த துன்பத்தை விளைவிக்கக் கூடும். அவ்வப்போது, நாம் அதை சுத்தமான தண்ணீரினால் கழுவி, களிம்பை மறுபடியும் தடவி, புதிதாக ஒரு கட்டுப் போட வேண்டும். அதைப் போலவே, , நமது வாழ்க்கையிலும், ‘’ நான், நான்,நான் ‘’ என்ற உணர்வின் உருவில், நமது உடலில் ஒரு கொப்புளம் வந்து விடுகிறது. நீங்கள் உண்மையிலேயே, இந்த ‘’ நான் ‘’ என்ற கொப்புளம் ஆற வேண்டும் என்று விரும்பினால், அதை ஒவ்வொரு நாளும் , ப்ரேமை என்ற நீரால் கழுவி, இறை நம்பிக்கை என்ற களிம்பைத் தடவி, அதைச் சுற்றி பணிவு என்ற கட்டைப் போட வேண்டும். பணிவு என்ற கட்டு, இறை நம்பிக்கை என்ற களிம்பு மற்றும் ப்ரேமை என்ற நீர், இந்த ‘’ நான் ‘’ என்ற கொப்புளத்துடன் தோன்றிய வியாதியை, கண்டிப்பாகக் குணப்படுத்தி விடும்.
பரிசுத்தமான ப்ரேமை சுயநலமற்றது –
சுயநலம் ப்ரேமையற்றது- பாபா