azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 14 Jan 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 14 Jan 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Makara Sankramana marks the movement of Sun from the south to the north. The northward movement of the Sun is considered highly significant, both spiritually and scientifically. The significant inner spiritual meaning of the Sun's northward journey must be properly understood. North is represented by Himachala (the Himalayas). Hima means snow. It is pure, untainted and extremely cool. Achala means that which is steady and unshakeable. Himachala does not refer to the physical Himalayan region. It represents that which is cool, peaceful and steady. All these endows one with the quality of perfect peace (Prasanthi). From today the Sun is moving towards such a state. The Sun symbolizes the vision of man. The northward movement of the Sun is a call to human beings to turn their vision towards that which is cool, peaceful and unchanging. The lesson you must learn is that you should direct your vision inwards. (Divine Discourse, Jan 14, 1994)
THE BEST SPIRITUAL DISCIPLINE IS: STRENGTHEN THE INWARD VISION. - BABA
மகர ஸங்க்ரமண என்பது சூரியன் தெற்கிலிருந்து, வடக்கு நோக்கி நகருவதாகத் தோன்றுவதைக் குறிக்கிறது.சூரியனின் இந்த வடக்கு நோக்கிய அசைவு, ஆன்மீகம், மற்றும் விஞ்ஞானம் என்ற இரண்டு விதத்திலும் மிகவும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.சூரியனின், முக்கியத்துவம் வாய்ந்த வடக்கு நோக்கிய நகர்வின் ஆன்மீக உட்கருத்தை, சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். வடக்கு என்பது ஹிமாசலத்தைக் ( இமய மலையை ) குறிக்கும். ஹிமா என்றால் பனி. அது, பரிசுத்தமானதும், மாசற்றதும், மிகவும் குளுமையானதும் ஆகும். அசலா என்றால், நிலையானதும், அசைக்க முடியாததும் ஆகும். ஹிமாசல என்றால், வெறும் பௌதீகமான இமயமலைப் பிரதேசத்தைக் குறிப்பதல்ல. அது, குளுமையான, சாந்தியான, நிலையான ஒன்றைக் குறிப்பதாகும். இவை அனைத்தும், ஒருவருக்கு பரிபூரண சாந்தியை (பிரசாந்தி) அளிக்கின்றன. இன்றிலிருந்து , சூரியன் அப்படிப் பட்ட ஒரு நிலையை நோக்கி நகருகிறான். சூரியன் மனிதனின் கண்ணோட்டத்தைக் (திருஷ்ட்டி) குறிக்கிறான். வடக்கு நோக்கிய சூரியனின் இந்த நகர்வு, மனிதர்கள் அனைவருக்கும், அவர்கள் தங்களது திருஷ்டியை, குளுமையான, சாந்தியான மற்றும், மாறாத ஒன்றை நோக்கித் திருப்ப வேண்டும் என்பதற்கான ஒரு அறைகூவலாகும். நீங்கள் உங்களது திருஷ்ட்டியை உள்நோக்கித் திருப்ப வேண்டும் என்பதே, நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாகும்.
தலைசிறந்த ஆன்மீக சாதனை:
உள்ளார்ந்த திருஷ்ட்டியை வலுப்படுத்துவதே - பாபா