azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 03 Jan 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 03 Jan 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

The industrial, agricultural, mercantile, political and administrative - these are like the five vital airs that sustain our activities. These must work in unison, prompted by love and mutual respect. Then alone can the community have peace, security and happiness. This cooperation is unfortunately not visible at the present time. Factional interests, on the other hand, are predominant and the competitive struggle is on in all fields. Excitement blinds reasoning. Passion, violence and cruelty create more problems without solving any. These are now flooding as a deluge. Individuals with no training and no sincere yearning to bear responsibility and discharge the obligations of office are raised to positions of authority. Ability, willingness to discharge duties and to bear burdens - these alone entitle one to hold authority over others. The power that office confers must be handled with gratefulness and reverence. If this is remembered and practised by every worker and officer, their work will give happiness, contentment and peace, both to themselves and to the society of which they are a limb. (Divine Discourse, Jan 1, 1971.)
ALL ARE ONE, BE ALIKE TO EVERYONE. - BABA
தொழில், விவசாயம்,வியாபாரம், அரசியல், நிர்வாகம்- இந்த ஜந்தும், நமது பணிகளைப் பராமரிக்கும் பஞ்ச பிராணன்களைப் போன்றவை.ப்ரேமை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றால் உந்தப்பட்டு, இவை ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். பின்னரே, சமுதாயத்தில், சாந்தி, பாதுகாப்பு மற்றும் சந்தோஷம் இருக்கும். துரதிருஷ்ட வசமாக, இன்றைய காலகட்டத்தில், இப்படிப் பட்ட ஒத்துழைப்பு காணப்படவில்லை. அதற்கு பதிலாக,கோஷ்டி அக்கறைகள் ஆதிக்கம் பெற்று, எல்லாத் துறைகளிலும், போட்டிப் போராட்டங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன. மனக்கிளர்ச்சி, பகுத்தறிவை குருடாக்கி விடுகிறது. கட்டுக் கடங்காத உணர்ச்சி, வன்முறை மற்றும் கொடுமை ஆகியவை எதையும் தீர்க்காமல், மேலும் பிரச்சனைகளை வளர்க்கின்றன. இவை இப்போது பிரளயமாகப் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டு இருக்கின்றன. எந்த விதமான பயிற்சியோ மற்றும் பொறுப்பை ஏற்று, அலுவலகத்தின் கடமைகளை நிறைவேற்றுவதற்கான ஆத்மார்த்தமான ஆவலோ இல்லாத மனிதர்கள், அதிகாரத்தின் பதவிகளில் அமர்த்தப் பட்டுள்ளார்கள். திறமை,கடமைகளை ஆற்றுவதிலும் பொறுப்புகளை சுமப்பதிலும் விருப்பம் ஆகியவை மட்டுமே ஒருவர், பிறரின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான உரிமை அளிக்கின்றன.ஒரு பதவி அளிக்கும் அதிகாரத்தை, நன்றி உணர்வுடனும்,பயபக்தியுடனும் கையாள வேண்டும். ஒவ்வொரு பணியாளரும், அதிகாரியும், இதை நினைவில் கொண்டு கடைப்பிடிப்பார்களே ஆனால், அவர்களது பணி ,அவர்களுக்கும்,அவர்களே ஒரு அங்கமாக இருக்கும் சமுதாயத்திற்கும், சாந்தி, சந்தோஷங்களையும் திருப்தியையும் அளிக்கும்.
அனைவரும் ஒன்றே. அனைவரிடம் ஒன்று போல நடந்து கொள்ளுங்கள் - பாபா