azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 24 Dec 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 24 Dec 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

What is it that people should acquire today? It is the broadening of the heart so that it may be filled with all-embracing love. Only then the sense of spiritual oneness of all mankind can be experienced. Out of that sense of unity will be born the love of God. This love will generate pure bliss in the heart that is boundless, indescribable and everlasting. For all forms of bliss, love is the source. A heart without love is like a barren land. Foster love in your hearts and redeem your lives. Whatever your scholarship or wealth, they are valueless without love. Without devotion all other accomplishments are of no avail for realising God. Men aspire for liberation. True liberation means freedom from desires. Today people cannot go to forests for penance or engage themselves in meditation and other spiritual exercises. The easiest spiritual path for all people is to dedicate all their actions to God. (Divine Discourse, Dec 25, 1994)
DESIRES ARE BORN OF GREED. WHEN GREED IS WEAKENED MORE AND MORE,
DISCONTENT DECLINES IN EQUAL MEASURE. - BABA
இன்று மக்கள் பெற வேண்டியது எது?அனைத்தையும் அரவணைக்கும் அன்பால் நிரம்பும் அளவிற்கு, இதயத்தை விசாலமாக்கிக் கொள்வதைத் தான்.அதன் பிறகே, அனைத்து மனித குலத்தின் ஆன்மீக ஒருமையை அனுபவிக்க முடியும். அந்த ஒருமை உணர்விலிருந்து தான் இறைவன் பால் ப்ரேமை பிறக்கும். இந்த ப்ரேமை, இதயத்தில் எல்லையற்ற,விவரிக்க முடியாத, நிரந்தரமான பரிசுத்த ஆனந்தத்தை உருவாக்கும். அனைத்து விதமான ஆனந்தத்திற்கும் ப்ரேமையை மூலாதாரம். ப்ரேமை அற்ற ஒரு இதயம் ஒரு வரண்ட பாலைவனத்தைப் போன்றது. உங்கள் இதயங்களில் ப்ரேமையைப் பேணி வளர்த்து, உங்களது வாழ்க்கைகளைப் புனிதமாக்கிக் கொள்ளுங்கள்.உங்களது பாண்டித்யமோ அல்லது பணமோ என்னவாக இருந்தாலும், ப்ரேமை இல்லை என்றால், அவை மதிப்பற்றவையே. பக்தி இன்றி, மற்ற அனைத்து சாதனைகளும், இறைவனை உணர்வதற்கு, பயனற்றவையே.மனிதர்கள் மோக்ஷத்தை நாடுகிறார்கள். உண்மையான மோக்ஷம் என்பது, ஆசைகளிலிருந்து விடுபடுவது தான். இந்நாளில், மனிதர்கள் தவம் செய்ய கானகத்திற்குச் செல்லவோ அல்லது தியானம் மற்றும் பிற ஆன்மீக சாதனைகளில் ஈடுபடவோ இயலாதவர்களாக இருக்கிறார்கள்.அனைத்து மனிதர்களுக்கும் ஏற்ற எளிமையான ஆன்மீகப் பாதை, அவர்களது அனைத்து செயல்களையும் இறைவனுக்கு அர்ப்பணிப்பதே.
ஆசைகள், பேராசையிலிருந்து பிறக்கின்றன; பேராசையின் வலிமை குறையக் குறைய, அதிருப்தியும் அதே அளவு குறைந்து விடுகிறது - பாபா