azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 23 Dec 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 23 Dec 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Jesus taught simple practical lessons in spiritual advancement for the good of mankind; He manifested divine powers to instill faith in the validity of His teachings; He marked out the path that confers sweet nectar of bliss (Ananda) on humanity. He exhorted people by precept to cultivate the virtues of charity, compassion, forbearance, love and faith. We must pay attention to the sacrifice that Jesus made while free, out of His own volition. He sacrificed His happiness, prosperity, position, comfort, and safety, and braved the enmity of the powerful. He refused to yield or compromise. He renounced the ego, which is the toughest thing to get rid of. Honour Him for these. He willingly gave up the desires with which the body torments man; this is a great sacrifice. The celebration of His birthday has to be marked by your sacrificing at least a desire or two, and conquering at least the more disastrous urges of the ego. (Divine Discourse, Dec, 24, 1972)
DESIRES ARE BORN OF GREED. WHEN GREED IS WEAKENED MORE AND MORE,
DISCONTENT DECLINES IN EQUAL MEASURE. - BABA
மனித குலத்தின் நலனுக்கான ஆன்மீக முன்னேற்றத்தைக் குறித்த எளிய நடைமுறைக்கேற்ற பாடங்களை ஏசு கிருஸ்து போதித்தார்.அவரது போதனைகளின் ஏற்புடமையில் நம்பிக்கையை பதிக்க வைப்பதற்காக தெய்வீக சக்திகளை அவர் வெளிப்படுத்தினார்; மனித குலத்திற்கு ஆனந்தம் எனும் இனிய அமுதத்தை அளிக்க வல்ல பாதையை அவர் வகுத்துத் தந்தார். அவர், நற்சீலங்களான ஈகை,கருணை, சகிப்புத் தன்மை, ப்ரேமை மற்றும் இறை நம்பிக்கை ஆகியவற்றை வளர்த்துக் கொள்ளுமாறு, தனது நடத்தையின் மூலம், மக்களுக்கு அறிவுறுத்தினார்.சுதந்திரமானவராக இருந்தாலும் கூட, தானே முன்வந்து, ஏசு கிருஸ்து செய்த தியாகத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அவர் தனது சந்தோஷம்,வளமை,பதவி,சௌகரியம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைத் தியாகம் செய்து, அதிகார பலம் படைத்தவர்களின் விரோதத்தை தைரியமாக எதிர் கொண்டார்.அவர் அடிபணியவோ அல்லது சமரசம் செய்து கொள்ளவோ மறுத்தார்.விடுவதற்கு மிகவும் கடினமான அஹங்காரத்தை, அவர் துறந்தார்.இவைகளுக்காக அவரைப் போற்றுங்கள். மனிதனைத் தவிக்க வைக்கும் உடல் ரீதியான ஆசைகளை அவர் தானே விரும்பி கை விட்டார். நீங்கள், குறைந்த பட்சம் ஒன்றோ அல்லது இரண்டு ஆசைகளைத் தியாகம் செய்து, அதிகமான அழிவிற்கு இட்டுச் செல்லும் அஹங்காரத்தின் தூண்டுதல்களை வெல்வதே அவரது பிறந்த நாளைக் கொண்டாடுவதைக் குறிப்பதாகும்.
ஆசைகள், பேராசையிலிருந்து பிறக்கின்றன; பேராசையின் வலிமை குறையக் குறைய, அதிருப்தியும் அதே அளவு குறைந்து விடுகிறது - பாபா