azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 22 Dec 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 22 Dec 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

The greatest obstacle on the path of surrender is egoism and ‘mine-ness’ or possessiveness. This is buried in your personality since ages, sending its tentacles deeper and deeper with every succeeding life. It can be removed only by the twin detergents of discrimination and renunciation. Devotion is the water to wash away this age old dirt, and the repetition of God’s name, meditation, and communion (yoga) are the soap that will make the cleansing more effective and quicker. The slow and steady aspirants will surely win this race; walking is the safest method of travel, though it may be condemned as slow! Quicker means of travel guarantees disaster; quicker the means, greater the risk of disaster. You should eat only as much as is needed to satiate your hunger, more will cause disorder. Similarly, proceed step by step in spiritual effort with faith; do not slide back two paces with one pace forward. (Divine Discourse, Oct 7, 1993.)
IGNORANCE, WAVERING FAITH, FICKLENESS, AND EGOISM—THESE TARNISH THE NATURE OF MAN;THEY ROB HIM OF EVEN THE TINIEST INTO OF PEACE. - BABA
சரணாகதிப் பாதையின் மிகப் பெரிய தடை அஹங்காரமும், மமகாரமுமே ( நான், எனது ); இவை, உங்களது இயல்பில் காலம் காலமாக, பொதிந்து, தனது விழுதுகளை, அடுத்து, அடுத்து வரும் ஜன்மங்களில், மேலும் மேலும் ஆழமாக ஊன்றிக் கொண்டே சென்று கொண்டு இருக்கின்றன. இவற்றை, இரட்டை சலவைப் பொருட்களான, பகுத்தறிவு மற்றும் பற்றின்மையால் மட்டுமே நீக்க முடியும். பக்தியே, பழைய அழுக்கை நீக்குவதற்கான தண்ணீராகும்; இறை நாமஸ்மரணை,தியானம் மற்றும் யோகம் போன்ற சவுக்காரங்கள், திறமையாகவும், துரிதமாகவும் இந்த அழுக்கை நீக்கும். நிதானமாகவும், நிலையாகவும் செல்லும் ஆன்மீக சாதகர்கள் இந்தப் ஓட்டப் பந்தயத்தில் கண்டிப்பாக வெற்றி பெறுவர் ; நடப்பது, மிகவும் மெதுவானது எனக் குறை கூறப் பட்டாலும், மிகவும் பாதுகாப்பான பயண முறைதானே! வேகமாகப் பயணிப்பது விபத்தை உறுதி செய்கிறது; பயணத்தின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க, விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது.உங்களது பசியைத் தீர்க்கும் அளவிற்கே நீங்கள் உண்ண வேண்டுமே தவிர, அது அதிகமானால், அஜீரணத்தை ஏற்படுத்தும். அதைப் போல, ஆன்மீக சாதனையில் படிப்படியாக, நம்பிக்கையுடன் முன்னேறுங்கள்; ஒரு அடி முன் சென்று, இரண்டடி பின் வழுவி விடாதீர்கள்.
அறியாமை,ஊசலாடும் நம்பிக்கை,சஞ்சலம் மற்றும் அஹங்காரம் - இவை மனிதனின் இயல்பைக் களங்கப் படுத்துகின்றன; அவை, எள்ளளவு சாந்தியைக் கூட அவனிடமிருந்து திருடி விடுகின்றன- பாபா