azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 11 Dec 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 11 Dec 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

How long can you stagnate in the same class of devotion? Have you no wish to get promoted to the next higher class? In devotion (Bhakti), there are two classes, Sahaja-bhakti and Vishesha-bhakti. Sahaja-bhakti is satisfied with puja (worship), vrata (observing ritual worship), bhajan, namasmaran, (group singing, remembrance of Lord), pilgrimage, etc. Visesha-bhakti craves for purity of character, suppression of impulses, control of the mind, practice of daya, prema, shanti, ahimsa (compassion, love, peace and nonviolence), etc., and inquiry into the why and wherefore of man. It is a matter of shame that people stick to the same class of sahaja-bhakti year in and year out. When you clear these two, there is another higher class named Para Bhakti (Seeing God everywhere), too. Cleverness can correct and solve external problems; concentrated sadhana alone can correct and solve the internal crisis fuming within. (Divine Discourse, Jan 14, 1967)
BE LIKE THE TONGUE IN THE MIDST OF THE TEETH, CAREFULLY, CONFIDENTLY, COURAGEOUSLY GOING ABOUT ITS TASK, WITHOUT GETTING BITTEN. - BABA
எவ்வளவு காலம் தான் பக்தியின் ஒரே வகுப்பிலேயே தங்கி இருப்பீர்கள்? அடுத்த மேல் வகுப்பிற்கு, முன்னேறிச் செல்லும் விருப்பம் உங்களுக்கு இல்லையா? பக்தியில், சஹஜ பக்தி,விசேஷ பக்தி என இரண்டு வகை உண்டு. சஹஜ பக்தி, பூஜை, வ்ரதம், பஜன், இறைநாமஸ்மரணை, தீர்த்த யாத்திரை போன்றவைகளால் திருப்தி அடைந்து விடும்.விசேஷ பக்தி என்பது, குணநலனின் பரிசுத்தம், உந்துதல்களை அடக்குவது, மனக்கட்டுப்பாடு, தயை, ப்ரேமை,சாந்தி, அஹிம்ஸா ஆகியவற்றைக் கடைப்பிடித்தல் போன்றவைக்காக ஏங்குவதும்,மனிதனைப் பற்றி ஏன் , எங்கு என்று ஆராய்வதும் ஆகும்.மனிதர்கள் வருடா வருடம்,சஹஜ பக்தியையே பற்றி நிற்பது, அவமானப்பட வேண்டிய ஒரு விஷயமாகும். இந்த இரண்டிலும் நீங்கள் தேர்ந்த பிறகு, இவற்றை விட உயர்ந்த வகுப்பான பரபக்தி ( எங்கும் இறைவனைக் காண்பது ) என்று ஒன்று உள்ளது. புத்திசாலித்தனம் , வெளிப்புறத்தில் உள்ள பிரச்சனைகளைத் திருத்தித் தீர்க்க முடியும்; மனக்குவிப்பு நிறைந்த ஆன்மீக சாதனை மட்டுமே உள்ளே புகைந்து கொண்டிருக்கும் நெருக்கடியைத் தீர்க்க முடியும்.
பற்களுக்கு நடுவில், கவனமாகவும்,தன்னம்பிக்கையுடனும், தைரியமாகவும், கடிபடாமலும், தனது பணியை ஆற்றும் , நாக்கினைப் போல இருங்கள் -பாபா