azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 09 Dec 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 09 Dec 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Some people are envious of the high standard of living experienced by people living in rich nations, but the poverty of India is much more congenial to the good life than the luxurious and vainglorious life of the west. The sea has a vast expanse of water, but can it quench the thirst of man? Similarly, however much riches and comfort a person may possess, if they have not cultivated detachment, all they’ve accumulated is but sheer waste. Detachment from sensual pleasures and objective pursuits helps the growth of Love towards God and the Godly. When you realise that God is in you, you will value yourself much more, for when you know that the piece of 'glass' you picked up is diamond, you will secure it in an iron safe, isn’t it? Similarly know that each one of you are carefully carved by a sculptor to become a charming idol of God, and conduct yourself accordingly.(Divine Discourse, Jan 1, 1967)
PRACTICE DETACHMENT FROM NOW ON; PRACTICE IT LITTLE BY LITTLE, FOR A DAY WILL COME SOONER OR LATER WHEN YOU MUST GIVE UP ALL THAT YOU HOLD DEAR. - BABA
பணக்கார நாடுகளில் வசிக்கும் மக்கள் அனுபவிக்கும் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தைக் கண்டு சிலர் பொறாமை கொள்கிறார்கள்; ஆனால், வசதியான மற்றும் இறுமாப்பான மேலை நாடுகளின் வாழ்க்கையை விட, இந்தியாவின் ஏழ்மை, ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு மிகவும் உகந்ததாகும்.கடலுக்கு ஒரு பரந்த விரிந்த நீர்ப்பரப்பு இருக்கிறது; ஆனால், மனிதனது தாகத்தை அது தணிக்க முடியுமா? அதைப் போலவே, ஒரு மனிதன் எவ்வளவு தான் செல்வங்கள் மற்றும் சௌகரியங்களைப் பெற்றிருந்தாலும்,அவர்கள் பற்றின்மையை வளர்த்துக் கொள்ளவில்லை என்றால், அவர்கள் குவித்து வைத்துள்ள அனைத்தும் வெறும் வீணே அன்றி வேறில்லை.புலனின்பங்கள் மற்றும் பொருட்களின் தேடலிலிருந்து பற்றின்றி இருப்பது, தெய்வம் மற்றும் தெய்வீகமானவற்றின் மீது ப்ரேமை வளருவதற்கு உதவியாக இருக்கும். இறைவன் உங்களுள் உறைகிறான் என்பதை நீங்கள் உணர்ந்து விட்டால், உங்களை நீங்களே உயர்வாக மதிப்பீர்கள்; ஏனெனில், கண்ணாடித் துண்டு என்று எண்ணி நீங்கள் பொறுக்கி எடுத்த பொருள் வைரம் என்று தெரிந்து விட்டால், அதை இரும்புப் பெட்டியில் பத்திரமாக வைப்பீர்கள் அல்லவா? அதைப் போலவே, நீங்கள் ஒவ்வொருவரும், ஒரு சிற்பியால் கவனமாக, இறைவனது ஒரு அழகான சிலையாக ஆவதற்காகச் செதுக்கப்படுகிறீர்கள் என்பதை அறிந்து, அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்ளுங்கள்.
இப்போதிலிருந்தே பற்றுதலை விடப் பழகிக் கொள்ளுங்கள்; கொஞ்சம்,கொஞ்சமாகப் பழக்கப் படுத்திக் கொண்டு வாருங்கள், ஏனெனில், என்றாவது ஒருநாள், நீங்கள் பிரியமானவை என்று பிடித்துக் கொண்டு இருக்கும் அனைத்தையும் விட்டு விட வேண்டி இருக்கும் - பாபா