azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 01 Dec 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 01 Dec 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Embodiments of Divine! Different people today pursue different kinds of Sadhana. To realise the benefits of this Sadhana, they go to Ashrams, adore elders and worship them. As long as egoism remains in them, all these exercises are of no avail. Hence suppress your ego, bury the sense of possessiveness and develop attachment to the Atma to realise your true humanness. In Sai organisations, the primary requisite is unity and mutual trust. Only with unity can you promote the wellbeing of the world. If there is discord within the organisation, how can you serve others? Today, envy, hatred and anger are causing havoc amongst all people. At the outset, destroy your ego. Then anger will subside. Anger is described as incense offered to sin. Make forbearance your ornament. Through love, eliminate your bad traits. Do your duty without projecting your ego. Develop mutual helpfulness. Be friendly towards each other and carry on your work with joy and peace. (Divine Discourse, 7-Oct-1993)
DESIRE DESTROYS DEVOTION, ANGER DESTROYS WISDOM, GREED DESTROYS WORK
– HENCE SACRIFICE THESE BAD QUALITIES AT THE LORD’S FEET. - BABA
தெய்வீகத்தின் திருவுருவங்களே! பல தரப்பட்ட மனிதர்கள், இன்று, வெவ்வேறு விதமான ஆன்மீக சாதனைகளைப் பின்பற்றுகிறார்கள்.இந்த சாதனையின் பலன்களைப் பெற, அவர்கள் ஆசிரமங்களுக்குச் சென்று, பெரியவர்களைப் போற்றி, வழிபடுகிறார்கள்.அவர்களுக்குள் அஹங்காரம் இருக்கும் வரை, இந்த பயிற்சிகள் எல்லாம் பயனற்றவையே.எனவே, உங்களது உண்மையான மனித இயல்பை உணருவதற்கு, அஹங்காரத்தை அடக்கி, தனக்கு மட்டுமே சொந்தம் என்ற உணர்வை குழி தோண்டிப் புதைத்து,ஆத்மாவுடனான பற்றுதலை அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள். சாய் நிறுவனங்களில், பிரதான தேவை ஒற்றுமையும், பரஸ்பர நம்பிக்கையுமே. ஒற்றுமையினால் மட்டுமே நீங்கள் உலக நலனை ஊக்குவிக்க முடியும்.நிறுவனத்திற்குள்ளேயே இணக்கமின்மை இருந்தால், நீங்கள் பிறருக்கு எவ்வாறு சேவை ஆற்ற முடியும்?இந்நாளில், பொறாமை, த்வேஷம் மற்றும் கோபம் ஆகியவை மனிதர்களிடையே பேரழிவை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றன.முதன் முதலில் உங்களது அஹங்காரத்தை அழித்து விடுங்கள், பின்னர் கோபம் தணிந்து விடும்.கோபம் என்பது, பாவத்திற்கு ஊதுவத்தி ஏற்றி வைப்பது போன்றது என வர்ணிக்கப் படுகிறது. பொறுமையை உங்களது ஆபரணமாக ஆக்கிக் கொள்ளுங்கள். ப்ரேமையின் மூலம், உங்களது தீய இயல்புகளை அகற்றி விடுங்கள்.உங்களது அஹங்காரத்தை முன் நிறுத்தாமல், உங்களது கடமைகளை ஆற்றுங்கள். பரஸ்பர உதவியை வளர்த்துக் கொள்ளுங்கள்.ஒருவருக்கு ஒருவர் நட்புணர்வுடன் இருந்து, உங்களது பணிகளை, சாந்தி, சந்தோஷத்துடன் ஆற்றுங்கள்.
ஆசை, பக்தியை அழிக்கிறது, கோபம் ஞானத்தை அழிக்கிறது, பேராசை , கர்மாவை அழிக்கிறது – எனவே இந்த கெட்ட குணங்களை பகவானின் பொற்பாத கமலங்களில் அர்ப்பணித்து விடுங்கள் - பாபா