azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 23 Nov 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 23 Nov 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

What is it that you can offer to the Lord who is omnipotent, omnipresent and all-knowing? The Lord has endowed you with all his wealth and Divine potentialities. You are inheritors of His wealth. You have to discover what that wealth is. Sai's wealth is nothing but pure, selfless and boundless Love. You must inherit this Love, fill yourselves with it and offer it to the world. This is your supreme responsibility. Embodiments of the Divine! To realise the divine, Love is the easiest path. Just as you can see the moon only with the light of the moon, God, who is the Embodiment of Love, can be reached only through Love. Regard selfless love as your life breath. Love was the first quality to emerge in the process of creation. All other qualities came after it. Therefore, fill your hearts with pure selfless love and lead your life with selfless love as the foundation. (Divine Discourse, Nov 23, 1986)
PURE LOVE SEES ALL AS ONE DIVINE FAMILY. - BABA
அனைத்தும் அறிந்த, அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துள்ள, அனைத்து வல்லமையும் பொருந்தியுள்ள ஆண்டவனுக்கு, நீங்கள் எதை அர்ப்பணிக்க முடியும்? இறைவன் தனது அனைத்து வளங்களையும், தெய்வீக வல்லமைகளையும் உங்களுக்கு அளித்துள்ளான். நீங்களே, அவனது சொத்தின் வாரிசுகள். அது என்ன சொத்து என்பதை நீங்கள் தான் கண்டு பிடிக்க வேண்டும். சாயியின் சொத்து, பரிசுத்தமான, தன்னலமற்ற, அளவற்ற ப்ரேமையே அன்றி வேறில்லை. இந்த ப்ரேமையை நீங்கள் மரபுரிமையாகப் பெற்று, உங்களை அதனால் நிரப்பிக் கொண்டு, அதை இந்த உலகிற்கே அளிக்க வேண்டும்.இதுவே உங்களது தலை சிறந்த கடமையாகும். தெய்வீகத்தின் திருவுருவங்களே! தெய்வீகத்தை உணருவதற்கு ப்ரேமையே மிகவும் எளிதான பாதையாகும். எவ்வாறு நீங்கள் சந்திரனை, அதன் ஒளியைக் கொண்டு மட்டுமே காண முடியுமோ, அவ்வாறே, ப்ரேமையின் திருவுருமான இறைவனை, ப்ரேமையின் மூலம் மட்டுமே அடைய முடியும். தன்னலமற்ற ப்ரேமையை, உங்களது உயிர் மூச்சாகக் கருதுங்கள். படைப்பில் முதன் முதலில் வெளிப்பட்ட குணம் ப்ரேமையே. மற்ற அனைத்து குணங்களும் அதன் பிறகே வந்தன.எனவே, உங்களது இதயங்களை தன்னலமற்ற ப்ரேமையால் நிரப்பிக் கொண்டு, அந்த தன்னலமற்ற ப்ரேமையை, அஸ்திவாரமாகக் கொண்டு, உங்களது வாழ்க்கையை நடத்துங்கள்.
பரிசுத்தமான ப்ரேமை, அனைவரையும்,
ஒரே தெய்வீகக் குடும்பமாகக் காண்கிறது - பாபா